உலகம்
Typography

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் தொகை 2200க்கும் அதிகமாகிவிட்ட நிலையில், இந் நோய் தாக்க வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக அறிவிக்கபடுகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் இந்த வைரஸ் தொற்று, சீனாவுக்கு வெளியேயும் உயிர்ப் பலிகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. யப்பானில் இருவர் இந்நோய்க்குப் பலியாகியதான செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது ஈரானிலும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அண்மையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனிக்காமல் இருவரும் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இருவரும் ஈரானின் தென் பகுதியிலுள்ள குவாம் மாகாணத்தைச் செர்ந்தவர்கள் என்றும், இவர்கள் இருவரும் இம் மகாணத்தை விட்டு வெளியே பயணம் செய்யாத நிலையில், அவர்களை எப்படி இந்த வைரஸ் தாக்கியது என்பது ஆச்சரியமளிப்பதாகவும், இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்