உலகம்

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், இந்தியாவிலுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தலாம் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாஜகவின் இந்துத்துவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டமையும் இந்தச் சட்டத்திருத்தங்கள், இந்தியாவில் முஸ்லிம் மக்களை நிலையற்றவர்களாக மாற்றக்கூடும்.

பாஜகவின் பல்வேறு தலைவர்களின் கருத்துகளையும், மேற்கோள்களாக இந்த அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அறிக்கை வெளிவந்திருப்பதும் கவனம் பெறுகிறது.

இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்க்லாவை, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் அறியவருகிறது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று புதன்கிழமை காலை 07.00 மணி முதல் இடம்பெற்று வருகின்ற நிலையில், பிற்பகல் 03.00 மணி வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 55 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. 

பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று புதன்கிழமை நடைபெற்று வருகின்ற நிலையில், மதியம் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 40 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரத்தில் உள்ள சரயு நதிக்கரையில் ராமர் கோவில் கட்டப்படும் தொடக்க விழாவை இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. ராமர் கோவில் பற்றிய பல ஆச்சர்யத் தகவல்களை வாசகர்களுக்குப் பகிர்கிறோம்.

தமிழகம் என்றில்லை; இந்தியா முழுவதுமே கொரோனா நோயாளி இறந்ததும் அவரது உடலை மூடி சீல் வைத்து நெருங்கிய ரத்த உறவுகளை கூட பார்க்க விடாமல் குழிக்குள் போட்டு மூடி விடும் நிலை காணப்படுகிறது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :