உலகம்
Typography

கோவிட் -19 எனப் பெயரிடப்பட்டுளன்ள கொரோனா வைரஸ் உலகம் முழுவதற்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. சீனாவின் யுகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தாக்குதலுக்கு, ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் இருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் உயிரழப்புக்கள் சீனாவிற்கு வெளியேயும் நிகழ்த் தொடங்கியிருப்பது உலகம் முழுவதையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மக்காவ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியின் லொம்பார்டியா பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதியவர் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த உயிரழ்ப்புக்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நோய் தொற்று அச்சம் காரணமா, இத்தாலியின் வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள பத்து நகரங்களில் உள்ள, பாடசாலைகள், உணவங்கள், மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நடைபெறவிருந்த 3 சிரீ ஏ கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

வைரஸ் தொற்று அச்சத்தில் முடக்கபட்டுள்ள இத்தாலியின் பத்து நகரங்கள் Casalpusterlengo, Codogno, Castiglione d'Adda, Fombio, Maleo, Somaglia, Bertonico, Terranova dei Passerini, Castelgerundo and San Fiorano ஆகியன எனத் தெரியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS