உலகம்
Typography

ஆப்கானில் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் ஒரு வாரத்துக்கு யுத்த நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருகின்றது. 2001 முதல் உள்நாட்டுப் போர் இடம்பெற்று வரும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளுடன் தலிபான்கள் மோதி வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு தடவை யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றும் எதுவும் உறுதியான ஸ்திரத் தன்மையை ஆப்கானில் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானில் தற்போது தற்காலிக அமைதி ஏற்பட்ட போதும் இதனை அந்நாட்டு மக்கள் தெருக்களில் சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டாடியுள்ளனர்.

இதேவேளை ஆப்பிரிக்காவில் நைஜீரியாவுக்குத் தெற்கெ மாலி மற்றும் புர்கினோ பசோ நாடுகளின் எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது நைஜீரியா மற்றும் பிரான்ஸ் கூட்டுப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 120 தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர். இது தவிர குறித்த தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் வாகனங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்