உலகம்

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இதுவரை ஏழுபேர் பலியாகியது உறுதிசெய்ப்பட்டுள்ளத. நேற்று திங்கள் கிழமை மாலை லொம்பார்டியா பகுதியில் இந்டத இழப்பு ஏற்பட்டுள்ளது. இதலி பலியானவர் 62 வயது நபர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்ற வெள்ளிக்கிழமை வெனிஸ் பகுதியில் தொடங்கிய இந்த இழப்பில் மிகுதி 6 பேரும் லொம்பார்டியா பகுதியியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் மூன்று பேர் இறந்துள்ளனர். இநத்த்த தொற்றுக்கு ஆளாகிய மேலும் மூவர் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரியவருகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட 12 நகர்பகுதிகளில், இதுவரை தீவிர பரிசோதனைக்குட்படுத்த பட்ட 4100 பேர்களில் 229 பேருக்கு இத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கபட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை 2663 பேர் பலியாகியுள்ளனர். சீனாவிற்கு  வெயளியே இந்த வைரஸட தொற்றின் பலி அதிகமாக நிகழ்ந்துள்ள நாடுகளாக இதுவரை தென்கொரியாவும், ஈரானும் இருந்து வந்த நிலையில், தற்போது இத்தாலியும் அந்த வரிசையில் மூன்றாவதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இந்த வைரஸ் தாக்கம் அதிகமுள்ள நாடாகவும் இத்தாலி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தாலிய அரச சுகாதாரத்துறைத் தகவல்களின் படி, வைரஸ் பரவும் தாக்கம் தீவிரமாகவில்லை, கட்டுப்பாட்டுக்குள் உள்தாகவும், ஆகவே பொது மக்கள் சுகாதாரத்துறை அறிவுறுத்தலகளைக் தொடர்ந்தும் கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுள்ளது.

வைரஸ் தாக்கம் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் பகுதிகள் அனைத்திலும், பொதுமக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பாடவாலைகள், உணவகங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நோய் கூறுகள் காணப்படின் மருத்துவ உதவி பெறுவதற்கு பிரத்தியேக இலக்கங்கள் பகுதிவாரியாக அறிவிக்கபட்டிருக்கிறது. தேவாலயங்களில் பிரார்த்தனைகளுக்காக மக்கள் கூடுவது நிறுத்தப்பட்டுள்ளது. மரணச்சடங்ககளுக்காக தேவாலயங்களில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மிலான் நகரில் வார இறுதியில் நடைபெற்ற பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொள்ள வேண்டிய ஆயத்தஆடை கண்காட்சி சோபையற்று இடைநிறுத்தபட்டுள்ளது. காற்பந்தாட்டப் போட்டித் தொடர்கள் இடை நிறுத்தபட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் வின்சென்சோ ஸ்பாடாபோறா அறிவித்துள்ளார்.

இத்தாலியப் பங்குச்ந்தை நேற்றைய தினமே சரிவைச் சந்தித்திருந்த நிலையில், இன்று அது மேலும் 5 வீத வீழ்ச்சி கண்டுள்ளது.

அசாதாரணமான இந்தச் சூழ்நிலிலையில் மக்கள் விவேகமாகச் செயற்பட வேண்டும் எனவும், குறிப்பாக முதியவர்களின் உடல்நிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இன்று செவ்வாய்கிழமை ரோமில், கோவிட் 19 வைரஸ் தாக்கம் குறித்து ஆலோசிப்பதற்காக, அன்டை நாடுகளான , ஆஸ்திரியா, குரோஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களின் கூட்டம் தலைநகர் ரோமில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

முன்னைய செய்திகள் :

இத்தாலியில் வைரஸ் தாக்கம் : எல்லைகள் மூடப்பட்டனவா ?

இத்தாலியில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் : 3பேர் பலி

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தவிர்க்க முடியாத வகையில் கோவிட்-19 இன் 2 ஆம் அலைத் தாக்கம் ஏற்படும் என்றும் இதைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சாத்தியம் உள்ளது என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது மாற்று வழிகள் எதுவும் இல்லை என சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் கூட்டமைப்பின் கோவிட் -19 பணிக்குழுவின் தலைவர் மார்ட்டின் அக்கர்மன் தெரிவித்துள்ளார்.