உலகம்

சுவிற்சர்லாந்தில், கோரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது நபர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தாலிய எல்லைப்புற மாநிலமாகிய திச்சினோ மாநிலத்தில் இவ் வைரஸ் தொற்றாளர் இனங் காணப்பட்டுள்ளதாக, சுவிஸ் சுகாதாரத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியின் லொம்பார்டியா பகுதியில் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதுமே, இதற்கு அருகாமையிலுள்ள சுவிஸ் எல்லைப்புற மாநிலமான திச்சினோ மாநிலத்திற்கு இது பரவும் அபாயம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலாவதாக 72 வயதுடைய ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது.

தொடர்ச்சியான காய்ச்சல், இருமல், சளி, சுவாசச் சிக்கல், தொண்டை வரட்சி, போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள், தாமதிக்காது மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுளார்கள். இவ்வாறான நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள், உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லாது, குடும்ப வைத்தியரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவரது அறிவுரைப்படி நடக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கான உதவி வழங்கல் தொடர்பாடலுக்காக 058 463 00 00 எனும் தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தாலியின் மற்றுமொரு எல்லைப்புற நாடான ஆஸ்த்திரியாவிலும் இந் நோய்த்தொற்றுடைய இருவரும், ஸ்பானியாவில் ஒருவரும், இன்று அடையாளங் காணப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.