உலகம்

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதாரத் தாபனமான WHO எச்சரித்துள்ளது.

தற்போதைய நிலையில் இது உடனடியாக நிகழாது என்றாலும் உலக நாடுகள் அனைத்தும் இதற்குத் தயாராக இருக்க வேண்டும் எனவும் WHO கோரிக்கை விடுத்துள்ளது.

மிக அதிகளவில் சீனாவில் 77 000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப் பட்டும் 2600 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தும் உள்ளனர். சீனாவுக்கு வெளியே தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இது வேகமாகப் பரவி வருகின்றது. மேலும் சமீபத்தில் குவைத், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான் மற்றும் வடகொரியாவிலும் இதன் தொற்று இனம் காணப் பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியே மொத்தம் 30 நாடுகளிலும் ஜப்பானுக்கு அருகே நிறுத்தி வைக்கப் பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலிலும் இது பரவியதற்கான அடையாளம் காணப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் மொத்தம் 1200 பேர் இனம் காணப் பட்டும் இதில் 20 இற்கும் அதிகமானவர்கள் பலியாகியும் உள்ளனர்.

இத்தாலியில் 7 பேரும், தென்கொரியாவில் 9 பேரும் பலியாகி உள்ளனர். ஸ்பெயினின் 1000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த சொகுசு ஹோட்டல் ஒன்றில் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியவர்கள் இருக்கின்றனர் என்ற செய்தி பரவியதை அடுத்து அந்த ஹோட்டலில் இருந்து யாரும் வெளியேறாத வண்ணம் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.

இதேவேளை கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக பங்குச் சந்தையில் பாதிக்கப் பட்ட நாடுகளின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.