உலகம்

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது பிரதமர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் இணைந்து 2018 இல் பகதான் ஹரப்பன் என்ற கூட்டணியை உருவாக்கி இருந்தன.

இதன் தலைவராகச் செயற்பட்ட மகாதீர் முகமது தான் தற்போது தனது இரு பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். இவரது பதவி விலகலை மலேசிய மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும் புதிய பிரதமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை இடைக்கால பிரதமராக மகாதீரை செயற்படுமாறு மன்னர் கோரிக்கை விடுத்துள்ளார்.

222 ஆசனங்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் தேர்வாக குறைந்தது 112 எம்பிக்கள் ஆதரவு தேவை. தற்போது ஆளும் பகதான் ஹரப்பன் கட்சிக்கு 102 எம்பிக்கள் ஆதரவு உள்ளதாகத் தெரிய வருகின்றது. பெரும்பாலும் அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராகத் தேர்வாக வாய்ப்பு இருந்த போதும் மலேசியாவில் தற்போது அரசியல் குழப்பநிலை நிலவுகின்றது.

இதனால் மலேசிய மன்னர் மீண்டும் பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிடவும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

 

 

 

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.