உலகம்

91 வயதுடைய முன்னால் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமாகியுள்ளார்.

1973 முதல் சுமார் 30 வருடங்கள் எகிப்தை ஆட்சி செய்த அவர் மக்கள் புரட்சி காரணமாகப் பதவி துறந்தார். இவர் முன்னால் விமானப்படை தளபதியும் ஆவார்.

முக்கியமாக 1973 இல் 'ஆக்டோபர் 6' இஸ்ரேலுடனான போரில் தனது வீர சாகசச் செயலுக்காக மாபெரும் போர் ஹீரோவாக எகிப்து மக்களால் கொண்டாடப் பட்டவர் ஆவார். முன்னால் அதிபர் அன்வர் அல் சதாத் படுகொலை செய்யப் பட்ட பின் அதிபர் பதவிக்கு வந்த ஹோஸ்னி முபாரக் 2011 வரை எகிப்து அதிபராகப் பதவி வகித்தார்.

எகிப்தில் 2011 இல் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்தது. அதிபர் ஹோஸ்னி முபாரக் இற்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் 18 நாட்கள் நீடித்த தொடர் ஆர்ப்பாட்டத்தில் எகிப்தே ஸ்தம்பித்தது. வேறு வழியின்றி 2011 பெப்ரவரி 11 இல் தனது பதவியை ஹோஸ்னி முபாரக் துறந்தார்.

தன் ஆட்சிக் காலத்தில் அடிப்படை வாதிகளால் நடத்தப் பட்ட பல தீவிரவாதத் தாக்குதல்களில் இருந்து தப்பித்திருந்த ஹோஸ்னி முபாரக் எகிப்தினை நீண்ட காலம் ஆட்சி செய்த 2 ஆவது அதிபராவார். இவர் 3 முறை போட்டியின்றி அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவரும் ஆவார்.

நீண்ட காலம் நோய் வாய்ப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் முபாரக் காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தவிர்க்க முடியாத வகையில் கோவிட்-19 இன் 2 ஆம் அலைத் தாக்கம் ஏற்படும் என்றும் இதைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சாத்தியம் உள்ளது என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது மாற்று வழிகள் எதுவும் இல்லை என சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் கூட்டமைப்பின் கோவிட் -19 பணிக்குழுவின் தலைவர் மார்ட்டின் அக்கர்மன் தெரிவித்துள்ளார்.