உலகம்

இத்தாலியில் கொரோனா வைரஸின் பாதிப்பால் மேலும் நால்வர் இறந்துள்ளதை, இத்தாலியச் சுகாதாரத்துறை உறுதிசெய்துள்ளது. செவ்வாய் கிழமை மாலை வெளியான இத்தரவுகளின் படி, இத்தாலியில் இந்த வைரஸ் தாக்கத்திற்குப் பலியானோர் தொகை 11 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் தொகையும் 322 ஆக உயர்ந்துள்ளது. இநத்ப் புள்ளிவிபரத் தகவல்களின் பிரகாரம் ஆசியாவிற்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றுகள் கொண்ட நாடாக இத்தாலி அறியப்படுகிறது.

இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ள லோம்பார்டியா பகுதியில் மட்டும் 212 பேர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே பகுதியிலே இந் நோய் தாக்கத்தின் இறப்புக்களும் அதிகம் நிகழ்ந்துள்ளன.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.