உலகம்

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இன்று புதன்கிழமை ஒருவர் பலியாகியுள்ளார். 374 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இத்தாலியின் மத்திய பகுதியான எமிலியா- ரோமமானா பகுதியில் இன்று மரணித்தவர், லோம்பார்டியா பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஒரு நபர். இன்றைய இந.த இழப்புடன், இத்தாலியில் இதுவரை இறந்தவர்கள் தொகை 12 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும், வயதானவர்கள் அல்லது முன்பே இருந்த மருத்துவப் பராமரிப்பு நிலைமைகளைக் கொண்டிருந்தவர்கள்.

தலைநகர் ரோமில் இன்று புதன் கிழமை, சுகாதார மந்திரி ராபர்டோ ஸ்பெரான்சாவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, ஐரோப்பிய ஒன்றிய சுகாதார ஆணையர் ஸ்டெல்லா கிரியாக்கிட்ஸ் "இது கவலைக்குரிய சூழ்நிலை, ஆனால் நாங்கள் பீதி கொள்ளத் தேவையில்லை " எனச் செய்தியாளர்களிடம் கூறினார். இத்தாலியப் பிரதமரும் இதனையே வலியுறுத்தி வருகின்றார்.

சுவிற்சர்லாந்தில் வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆலோசனைகளுக்கான உதவி வழங்கல் தொலைபேசி இலக்கதிற்கு, இன்று கூடிய அழைப்புக்கள் வந்ததாகவும், அழைப்புக்களுக்கான பதில்களைத் தருவதற்காக மூன்று மொழிகளிலும் முப்பது மேற்பட்ட அலுவலகர்கள் பதிலளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மரியாதைக்காக கைகளைக் குலுக்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
* முகத்தில் முத்தமிட்டு விடைபெறுவதை தவிர்த்துவிடுங்கள்.
* கைகளை அடிக்கடி கழுவிக்கொள்ளுங்கள்.
* ஒரு மீற்றர் தூர இடைவௌியில் நின்று உரையாடுங்கள்.
என்பன போன்ற ஆலோசனைகளை தொழில் நிறுவனங்களும், அலுவலகங்களும் ஊழியர்களுக்கு சுயபாதுகாப்பு ஆலோசனைகளாக அறிவுறுத்தியிருக்கிறன.

நெருக்கடியான இந்தச் சூழலில் ஊண்மைக்குப் புறம்பான வதந்திகளைப் பரப்பி மக்களைப் பீதியுறச் செய்யாதிருக்குமாறு ஊடகங்களையும், சமூக வலைத்தளப் பதிவாளர்களையும், ஐரோப்பிய ஒன்றியம் கேட்டிருக்கிறது.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.