உலகம்

பூமியில் உயிர் வாழ்க்கைக்கு மிக அவசியமானது ஆக்ஸிஜன்.

மனிதனின் உடல் மட்டுமன்றி பூமியில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து அதில் தான் அவற்றின் செல்கள் உயிர் வாழ்கின்றன. பூமியில் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஆக்ஸிஜனைப் பயன்படுத்தித் தான் பல்லுயிர்களும் பரிணாமம் அடைந்து வருகின்றன.

இந்நிலையில் எம் பூமியில் முதன் முதலாக ஆக்ஸிஜன் இன்றி உயிர் வாழும் முதல் உயிரினத்தைத் தாம் கண்டு பிடித்திருப்பதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆக்சிஜன் இன்றி உயிர் வாழக்கூடிய ஒட்டுண்ணி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். சால்மோன் எனப்படும் மீனின் தசைச் செல்களில் உயிர் வாழும் 10 இற்கும் குறைவான செல்களைக் கொண்ட ஜெல்லி மீன் போன்ற குறித்த ஒட்டுண்ணிக்கு ஹெனிகுவா சால்மினிகோலா எனப் பெயரிட்டும் உள்ளனர்.

பொதுவாக ஆக்ஸிஜனை சுவாசிக்கும் பல் செல் உயிரிகளில் ஆக்சிஜனை வேதி ஆற்றலாக மாற்றும் பணியைச் செய்வது மைட்டோகாண்ரியா எனப்படும் ஆற்றல் நிலையம் ஆகும். இந்த அமைப்பானது குறித்த ஒட்டுண்ணியில் இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய ஒட்டுண்ணியின் கண்டுபிடிப்பானது பூமியைத் தவிர்ந்த ஆக்ஸிஜன் அற்ற வேறு கிரகங்களில் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.