உலகம்

சிரியாவில் இராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற மோதல்களில் ஒரே நாளில் 100 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் மாத இறுதி முதல் சிரிய இராணுவம் ரஷ்யப் படைகளின் உதவியுடன் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றத் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் பயனாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அல் நக்யார், அர நபியா மற்றும் அல்டையிர் ஆகிய முக்கிய 3 நகரங்கள் மீட்கப் பட்டன. இட்லிப் இன் தெற்கே தம்மிடம் இருந்து மீட்கப் பட்ட நைராப் என்ற நகரை மீண்டும் கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் திங்கட்கிழமை கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பும் துப்பாக்கிச் சமருடன் கிரைனேடு குண்டுகளையும் வீசி மோதிக் கொண்டன. சுமார் 24 மணித்தியாலங்கள் நீடித்த சண்டையில் சுமார் 100 பேர் பலியாகினர்.

இதில் 41 இராணுவத்தினர் மற்றும் 53 கிளர்ச்சியாளர்கள் அடங்குகின்றனர். சண்டையின் இறுதியில் நைராப் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியது அரசுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. தற்போது கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி இராணுவமும், சிரிய இராணுவமும் தம்மிடையே கடும் விமானத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இட்லிப் இன் தென்கிழக்கே சராகெப் நகரில் உள்ள சிரிய இராணுவ நிலைகளில் துருக்கி பீரங்கிப் படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 9 சிரிய வீரர்கள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 9 வருடங்கள் நீடிக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கியும் களத்தில் போரிடுவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.