உலகம்

உலகம் முழுதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் சுமார் 37 நாடுகளில் 80 000 பேரைப் பாதித்துள்ளதாகவும், சீனாவில் மாத்திரம் 2715 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவுக்கு வெளியே அதிகபட்சமாக தென்கொரியா, இத்தாலி, ஈரான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 20 இற்கும் மேற்பட்டவர்களைப் பலி வாங்கி இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது.

சீனாவில் மாத்திரம் 78 064 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதற்குச் சிகிச்சை பெற்ற 27 323 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் கூடச் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரானில் சுகாதாரத் துறை இணையமைச்சர் இராஜ் ஹரிர்ச்சி உட்பட 61 பேர் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் வடபகுதியில் நூற்றுக் கணக்கானவர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்றும் அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்ட்ரியா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் ஓரிருவர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. ஜப்பான் துறைமுகத்தில் கோவிட்-19 அபாயம் காரணமாக இரு வாரங்களாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் தவித்து வரும் நோய்த் தொற்று ஏற்படாத 122 இந்தியர்களை விரைவில் விமானம் மூலம் மீட்கவுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

மறுபுறம் முகக்கவசம், கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 18 டன் மருந்துப் பொருட்கள் அடங்கிய இந்திய இராணுவ விமானம் செவ்வாய்க்கிழமை சீனா நோக்கிப் புறப்பட்டுள்ளது. இத்தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து இதுவரை 647 இந்தியர்களை மீட்டிருந்த இந்தியா அங்கு இன்னமும் நோய்த் தொற்று ஏற்படாது தவித்து வரும் நூற்றுக் கணக்கான இந்தியர்களை மீட்கவும் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதேவேளை சீனாவில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்படாது குழந்தை பிரசவித்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.