உலகம்

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸின் தொற்றுக்கு உலகம் முழுதும் உள்ளானவர்கள் எண்ணிக்கை 110 029 ஆக உயர்ந்தும், சிகிச்சைப் பலனின்றி உயர்ந்தவர்கள் எண்ணிக்கை 3817 ஆகவும் அதிகரித்துள்ளதுடன் உலகின் 105 நாடுகளில் இது பரவியும் உள்ளது.

இது சமீபத்திய உலக சுகாதாரத் தாபனமான WHO வெளியிட்ட புள்ளி விபரமாகும். சீனாவில் கோவிட்-19 தொற்றினால் சிகிச்சைப் பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை சமீபத்தில் 22 ஆகக் குறைவடைந்துள்ளது.

ஆனால் சீனாவைத் தவிர்த்துப் பார்த்தால் தென்கொரியாவிலும், ஈரானிலும், இத்தாலி,பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கோவிட்-19 வேகமாகப் பரவி வருகின்றது. இத்தாலியில் கோவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 7375 ஆகவும், அதன் அருகேயுள்ள சிறிய நாடான சுவிட்சர்லாந்தில் 332 ஆகவும், ஜேர்மனியில் 1112 ஆகவும், பிரான்ஸில் 1116 அண்மையில் வெகு வேகமாக அதிகரித்துள்ளது. அதிலும் இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் கோவிட்-19 வைரஸுக்குப் பலியாகி இருப்பதாகத் தெரிய வருகின்றது.

இதனால் வடக்கு இத்தாலியில் முடக்கப் பட்டுள்ள லொம்பார்டியா மாநிலத்திலும் அதன் தலைநகர் மிலான் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளிலும் பொது மக்கள் மத்தியில் பதற்றம் மிகவும் அதிகரித்துள்ளது. லொம்பார்டியாவுடன் அதன் அருகாமையில் உள்ள 15 மாகாணங்களைச் சேர்ந்த 160 000 000 பொதுமக்கள் எதிர்வரும் ஏப்பிரல் 3 ஆம் திகதி வரை தமது வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்லக் கூடாது என இத்தாலி பிரதமர் கியூசெப்பே கோண்ட்டே உத்தரவிட்டுள்ளார். இதனால் மல்பேன்சா விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்களும், பொது இடங்களும் வெறிச்சோடியுள்ளன.

மறுபுறம் கோவிட்-19 வைரஸ் பரவத் தொடங்கியிருந்த சீனாவில் ஜனவரி மாதத்துக்குப் பிறகு முதன் முறையாக அங்கு புதிதாக வைரஸ் தொற்றால் அனுமதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆகக் குறைந்தும், நேற்றைய உயிரிழப்பு 22 ஆகக் குறைந்தும் உள்ளது. ஆயினும் சீனாவில் மாத்திரம் பலி எண்ணிக்கை 3119 என்பதுடன் நாடு முழுதும் 80 700 இற்கும் மேற்பட்டவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.