உலகம்

"எதிர்காலம் நம்மைப் பொறுத்தது, எல்லோரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்.மக்கள் அனைவரும் வீடுகளில் தங்கியிருக்குமாறு வேண்டுகின்றேன் " என இத்தாலியப் பிரதமர் கியூசெப் கோன்டே நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்.

தொலைக்காட்சி வழியாக அவர் மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் மேலும்; " கோரோனா வைரஸ் நோய்த்தொற்று மற்றும் இறப்புகளில் நாங்கள் ஒரு முக்கியமான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறோம் ஆதலால் மக்கள் வீட்டில் தங்குவதே சிறந்த விஷயம். இத்தாலியின் பழக்கவழக்கங்கள் மாற வேண்டும். நாங்கள் அனைவரும் இத்தாலியின் நன்மைக்காக எதையாவது விட்டுக் கொடுக்க வேண்டும். நாம் இப்போது அதைச் செய்ய வேண்டும். நாம் அனைவரும் இந்த கடுமையான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து, ஏற்றவாறு மாற்றினால் மட்டுமே, நாம் இந்த நெருக்கடியிலிருந்து விடுபட முடியும்.

இதனால்தான் முன்கூட்டியே கட்டுப்படுத்த இன்னும் வலுவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தேன். மேலும் அனைத்து குடிமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறேன். பொதுவில் கூடியிருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இனி இரவு வாழ்க்கை இல்லை. அவை தொற்றுநோய்க்கான சந்தர்ப்பங்கள் என்பதால் இதை இனி அனுமதிக்க முடியாது. " என்று அவர் கூறினார்.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.