உலகம்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இத்தாலிய எல்லைபுறத்தில் அமைந்திருக்கும், சுவிற்சர்லாந்தின் தென் மாநிலமான டிசினோவில் இந்த இறப்பு பதிவாகியுள்ளது.

ஒரு வயோதிபர்மடத்திலிருந்த 80 வயதுப் பெண்மனியே இவ்வாறு உயிழந்துள்ளார் எனவும், இவர் ஏற்கனவே உடலாரோக்கியம் குறைந்தராக, நோய் வாய்ப்பட்டவராக இருந்தார் என்றும் மாநில சுகாதாரத்துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.

சுவிஸில் முதல் இழப்பு மார்ச் 5 அன்று பதிவு செய்யப்பட்டது. இதில் வோ மாநிலத்தில் 74 வயது பெண். இரண்டாவது பாதிக்கப்பு பாஸல்-லேண்ட் பிராந்தியத்தினைச் 76 வயது ஆண். இவர்கள் இருவருக்கும் முந்தைய நோய்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சவிற்சர்லாந்தில் தற்போது 491 பேருக்கு வைரஸ் தொற்று காணப்பட்டிருக்கிறது. இதில் 15 பேர் இலேசான அறிகுறிகள் உள்ளவர்கள் என பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்கள் கேள்விகளுக்கு தகவல் மற்றும் துல்லியமான அறிகுறிகளைப் பெற விரும்புவோர் இலவச எண் 0800 144 144 ஐ தொடர்பு கொள்ளலாம், ஒவ்வொரு நாளும் 7.00 முதல் 22.00 வரை செயலில் இருக்கும். இது தவிர மத்திய அரசினால் அறிக்கபட்டுள்ள கொரோனா வைரஸ் உதவிகளுக்கான பிரத்தியேக இலக்கம்: 058 463 00 00 24 மணி நேரமும் இயங்குகிறது.

இது இவ்வாறிருக்க இத்தாலியில் நாடு முழுவதும் அவசரகால சிகப்பு மண்டலப் பிரகடன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து சுவிற்சர்லாந்துக்குள் நழையும் வாகனங்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதனால், எல்லைபுற்ங்களில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் காத்திருந்ததாகவும், 250 வரையிலான வாகனங்களுக்கு அனுமதி மறுக்கபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தவிர்க்க முடியாத வகையில் கோவிட்-19 இன் 2 ஆம் அலைத் தாக்கம் ஏற்படும் என்றும் இதைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சாத்தியம் உள்ளது என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது மாற்று வழிகள் எதுவும் இல்லை என சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் கூட்டமைப்பின் கோவிட் -19 பணிக்குழுவின் தலைவர் மார்ட்டின் அக்கர்மன் தெரிவித்துள்ளார்.