உலகம்

இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமெடுக்கத் தொடங்கியிருப்பதாக அறிய முடிகிறது. வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்ட (பெப்ரவரி 21) நாளிலிருந்து மெல்ல மெல்ல அதன் தாக்க அதிகரித்து வந்த போதிலும், தற்போது மேலும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 168 பேரைக் காவு கொண்டிருக்கிறது. இது இத்தாலியில் வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதிலிருந்து ஒரே நாளில் அறியப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். இன்றைய இழப்புக்களுடன் இதுவரை வைரஸ் தாக்கத்திற்குப் பலியானோர் தொகை 631 எனவும், 10,000 க்கும் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அரசதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், சுமார் 60 மில்லியன் மக்கள் கொண்ட இத்தாலிய நாடு அரசினால் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினரும், சிவில் நிரவாக அதிகாரிகளும், வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வைரஸின் தொற்று, பெரும்பாலும் முதியவர்களைப் பாதிக்கிறது என்றாலும், இளவயதினருக்கும் தொற்று ஏற்படுவதனால், அவர்கள் அதனைப் பிறருக்கு கடத்திச் செல்பவர்களாக அமைய வாய்புள்ளதால் தேவையற்ற நடமாட்டங்களை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதரத்துறையினர் பரிந்துரைந்துள்ளனர். வரும் ஏப்ரல் 3ந் திகதி வரை இந்தத் தனிமைப்படுத்தல் தொடரும் எனவும் அறியத்தரப்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.