உலகம்

இன்றைய நிலவரப்படி உலக சுகாதாரத் தாபனமான WHO சமீபத்தில் வெளியிட்ட கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான புள்ளி விபர அடிப்படையில் உலகம் முழுதும் 113 851 பேருக்குத் தொற்றியும், 4015 பேர் பலியாகியும், 110 இற்கும் அதிகமான நாடுகளில் பரவியும் உள்ளது.

அதிகபட்சமாக சீனாவில் 80 924 பேருக்கும், இத்தாலியில் 9172 பேருக்கும், தென்கொரியாவில் 7513 பேருக்கும், ஈரானில் 7161 பேருக்கும், பிரான்ஸில் 1402 பேருக்கும், ஜேர்மனியில் 1139 பேருக்கும், ஸ்பெயினில் 1024 பேருக்கும், ஜப்பானில் 514 பேருக்கும், அமெரிக்காவில் 472 பேருக்கும், சுவிட்சர்லாந்தில் 332 பேருக்கும், டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 696 பேருக்கும், இந்தியாவில் 49 பேருக்கும் கோவிட்-19 தொற்றியுள்ளது.

இதேவேளையில் கொரோனாவில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவென வுஹான் நகரில் தற்காலிகமாகக் கட்டப் பட்ட மருத்துவ மனையை மூடுவதற்கு சீன அரசு முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு அரச இணையத் தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. ஜனவரியில் கோவிட்-19 வேகமாகப் பரவத் தொடங்கிய சமயத்தில் வுஹான் நகரில் ஆறே நாட்களில் ஆயிரம் படுக்கைகளுடன், 25 000 சதுர மீட்டரில் இந்த மருத்துவமனை கட்டப் பட்டு சிகிச்சைக்காக கோவிட்-19 நோயாளிகள் அனுமதிக்கப் பட்டனர்.

இங்கு சிகிச்சை பெற்று வந்த பெரும்பாலானவர்கள் உடல் நலத்துடன் வீடு திரும்பியிருப்பதாலும், நோயளிகளின் வரவு குறைந்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுகின்றது. சீன அரசின் இந்த அறிவிப்பால் பொது மக்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். சீனாவில் கிட்டத்தட்ட 60 000 பேர் சிகிச்சை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்பியிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதைவிட சீன அதிபர் ஜின்பிங் தகுந்த பாதுகாப்புடன் கொரோனாவால் முதலில் பாதிக்கப் பட்ட வுஹான் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் மருத்துவர்களையும், தாதிகளையும் உற்சாகப் படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கோவிட்-19 இன் தாக்கம் அதிகரித்து வரும் ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் ஐ.ஏ.எப் ரக விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளனர்.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.