உலகம்

கொரோனா வைரஸின் பரவலை கட்டுபடுத்துவது மற்றும் கண்கானிப்பு நடவடிக்கைகளை முக்கிய நோக்கமாகக் கொண்டு, இத்தாலிக்கும் சுவிற்சர்லாந்துக்கும் இடையிலான எல்லை போக்குவரத்துக்கள் முக்கியமான சாலைகள் வழியாக மட்டுமே நடைபெற அனுமதிக்கப்படும். இதே நோக்கங்களுக்காக , இத்தாலிய எல்லைப்புறத்திலுள்ள ஒன்பது சிறிய எல்லைக் கடப்புகள் இன்று மூடப்பட்டன.

மூடப்பட்ட பாதைகளுக்களுக்கான மாற்று வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Valichi chiusi -> Valichi alternativi

Pedrinate -> Chiasso strada (Ponte Chiasso)
Ponte Faloppia -> Novazzano Brusata (Bizzarone) o Chiasso strada
Novazzano Marcetto -> Novazzano Brusata (Bizzarone) o Chiasso strada
San Pietro di Stabio -> Stabio Gaggiolo
Ligornetto Cantinetta -> Stabio Gaggiolo
Arzo -> Stabio Gaggiolo o Brusino Arsizio
Ponte Cremenaga -> Fornasette o Ponte Tresa
Cassinone -> Fornasette
Indemini -> Dirinella (Zenna)

மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.

இத்தாலியுடனான எல்லை தாண்டிய பயணிகளுக்கு பிரதான எல்லைப்பாதைகள் திறந்திருக்கும். திங்கள்கிழமை முதல், இத்தாலி உத்தரவிட்ட நடவடிக்கைகளின் செயல்திறனைக் கவனிப்பதற்காக ஒரு கண்காணிப்பு முறையை பெடரல் சுங்க நிர்வாகம் (AFDநிறுவியுள்ளது எனவும் ரெிவிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்து எல்லைகளை மூடுவதற்கு யோசிக்கவில்லை என சுவிஸ் வெளியுறவு மந்திரி இக்னாசியோ காசிஸ் நேற்று பாரிஸ் மாநாட்டில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இத்தாலியில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றுக்கள் காரணமான கண்காணிப்பு நடவடிக்கைளை ஒருங்கமைக்கும் நோக்கில் இந் நடடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.