உலகம்

கொரோனா வைரஸ் தொற்று 89 பேருக்கு உள்ள நிலையில் இதுவரை உயிரிழப்புக்கள் எதுவும் கிரீஸில் பதிவாகவில்லை. ஆயினும் வைரஸ் இல்லாத நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைச் சமாளிக்க அனைத்து பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடிவிட உத்தரவிட்டுள்ளது கிரீஸ் அரசு.

இந்த உத்தரவு இரண்டு வாரங்கள் வரை  நீடிக்கும் என கிரீசின் சுகாதார அமைச்சர் வஸிலிஸ் கிகிலியாஸ் அறிவித்தார். மேலும், வைரஸ் தொற்றுத் தொடர்பில் அனைவரையும் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும், உழைக்கும் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளையும் அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க ; இத்தாலிய தொழிலாளர் ஆலோசகர்கள் ஆய்வு அறக்கட்டளையின் மதிப்பீட்டின்படி, பள்ளிகள் மூடப்பட்டதினால், 5 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் சுயதொழில் புரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகத் தெரிய வருகிறது.

தங்கள் குடும்ப அமைப்பைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு முழுநேர கவனிப்புடன் வேலைவாய்ப்பை மறுசீரமைப்பது உண்மையில் ஒரு சவாலாகும் எனக் கருதப்படுகிறது.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.