உலகம்

உலக சுகாதாரத் தாபனமான WHO இன் சமீபத்திய புள்ளி விபரப்படி உலகம் முழுதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 118 381 பேர் பாதிக்கப் பட்டும், 4292 பேர் பலியாகியும், 114 நாடுகளில் இந்த வைரஸ் பரவியும் உள்ளது.

சீனாவில் 80 955 பேரும் அதற்கு அடுத்த இடத்தில் இத்தாலியில் 10 149 பேரும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாத்திரம் இத்தாலியில் கோவிட்-19 தாக்குதலினால் 168 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை இத்தாலியில் 631 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இத்தாலியின் வடபகுதியில் உள்ள லொம்பார்டியா மாநிலம் உட்பட 11 இற்கும் மேற்பட்ட மாநிலங்கள் முற்றிலும் முடக்கப் பட்டு சிவப்பு நிற அவசர எச்சரிக்கை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. உலகில் அதிகளவு முதியவர்களைக் கொண்ட நாடாக இத்தாலி இருப்பதால் அந்நாட்டில் கோவிட்-19 தாக்குதலிக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை இந்தளவுக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இத்தாலியில் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், பொது மக்களுக்கு உண்மையான செய்திகளைத் தெரிவிப்பதிலும் அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக பொது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகின்றது. இத்தாலியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஏப்பிரல் 3 ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்தே பணி புரியுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். உணவகங்களும், மதுபான விடுதிகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்ற போதும் வாடிக்கையாளர்களுக்கான இடைவெளி குறைந்த பட்சம் 1 மீட்டர் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இத்தாலியில் கல்லூரிகளில் பயின்று வரும் 55 இந்திய மாணவர்கள் அங்கு விமான நிலையத்தில் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றில்லை என்ற அரச மருத்துவச் சான்றிதழ் காட்டப் படாததால் இவர்களை இந்தியா அழைத்து வர போர்டிங் பாஸ் தரப்படவில்லை. தற்போது தங்களை மீட்கும் விடயத்தில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என இம்மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தாலிக்கு அருகில் உள்ள சிறிய நாடான சுவிட்சர்லாந்தில் கோவிட்-19 தொற்றுக்கு 491 பேர் உள்ளாகியுள்ளதாகக் கணிக்கப் பட்டுள்ளது. இத்தாலிக்கு அடுத்த நிலையில், தென்கொரியாவிலும் அதற்கு அடுத்து ஈரானிலும் கோவிட்-19 தொற்று அதிகமாக உள்ளது. ஈரானில் கடந்த ஓரே நாளில் 63 பேர் பலியாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக ஈரானில் தற்காலிகமாக 70 000 சிறைக் கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர். மேலும் அங்கிருந்து 58 இந்தியர்கள் தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டு உத்தரப்பிரதேச முகாமில் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுக்கு வரத் தற்காலிகத் தடையும் விதிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே சீனா மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுக்குள் நுழையத் தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.