உலகம்
Typography

அண்மையில் சீனாவுடனான உறவில் தாய்வானுக்கு சற்று விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் தாய்வானுக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சியை அடைந்துள்ளது.

இதன் காரணமாக தாய்வானின் சுற்றுலாத் துறை வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் தாய்வானில் ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்து ஏஜண்டுக்களின் வியாபாரம் பாதிக்கப் பட்டுள்ளதால் அந்நாட்டு சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஊழியர்களால் முதன் முதலில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று தாய்வானில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. 

தாய்வானில் சுய ஆட்சிமுறை நடந்து வரும் போதும் சீனா அந்நாடு தன்னுடையது என 1949  முதல் சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் இப்பிராந்தியம் முழுதும் ஒரேயொரு  சீனா என்று பிரகடனப் படுத்தும் 1992 ஆம் ஆண்டு இணக்கத்தை தாய்வானின் அரசு ஏற்க மறுப்பதை குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்று வழி நடத்துபவர்கள் இணைத்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதாவது  ஒரேயொரு சீன தேசம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் நாம் அரசியலில் தலையிட விரும்பவில்லை. ஆனால் எமது வலி இன்னமும் அதிகமாகி இன்னும் 3 அல்லது  6 மாதங்களில் இந்த வலி இன்னமும் பல மடங்கு அதிகரிக்கப் போகின்றது! என போக்குவரத்து  ஏஜண்டு அமைப்பின் பேச்சாளர் ரிங்கோ லீ தெரிவித்துள்ளார்.

மே மாதம் முதற்கொண்டு பனி யுத்தத்தில் ஈடுபட்டு வரும் தாய்வான் மற்றும் சீன அரசுகள் எமக்கு உதவ முன்வர வேண்டும் என சுமார் 15 000 மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்து வரும் பிரதி ஒருங்கிணைப்பாளரான லீ தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS