உலகம்

கோவிட்-19 எனப்படும் உலகளாவிய கொரோனா தொற்று நோயைப் பெரும் தொற்று நோயாக (Pandemic)புதன்கிழமை உலக சுகாதாரத் தாபனமான WHO பிரகடனம் செய்துள்ளது.

WHO இன் அண்மைய புள்ளி விபரப்படி உலகளாவிய ரீதியில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 124 954 ஆக உயர்ந்தும், 4617பேர் பலியாகியும், 118 நாடுகளில் இது பரவியும் உள்ளது.

ஆங்கிலத்தில் உபயோகிக்கப் படும் Pandemic என்ற இந்தப் பதம் பொது மக்களிடையே தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக் கூடாத விதத்தில் தான் உலக சுகாதாரத் தாபனத்தால் கையாளப்படுவது என்பதுடன் ஒரு நோயின் தாக்கம் மிகவும் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் போது தான் இது உபயோகிக்கப் படுகின்றது. தற்போது கொரோனா பெரும் தொற்று நோயாக அறிவிக்கப் பட்டிருப்பதால் உலக நாடுகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் உடனே அவசர நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் விதத்தில் பணியாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு சீனாவில் 80 981 பேரும், இத்தாலியில் 12 462 பேரும், ஈரானில் 9000 பேரும், தென்கொரியாவில் 7869 பேரும், பிரான்ஸில் 2269 பேரும், சுவிட்சர்லாந்தில் 645 பேரும் உள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது. சீனாவில் 3172 பேரும், இத்தாலியில் 827 பேரும், ஈரானில் 354 பேரும், தென்கொரியாவில் 66 பேரும், பிரான்ஸில் 48 பேரும், சுவிட்சர்லாந்தில் 4 பேரும் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியும், வேறு காரணங்களாலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் ஆவர்.

கோவிட்19 தொற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உலக சுகாதாரத் தாபனமான WHO தெரியப் படுத்தியிருக்கும் நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை பழக்க வழக்கங்களைப் பார்ப்போம் :

1.வெளியே சென்று திரும்பிய பின்னரும், அறிமுகமற்றவர்களிடம் கை குலுக்கினாலும், உங்கள் கைகளை சோப் மற்றும் தண்ணீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்தல். அதன் பின் முடிந்தால் அல்கொஹோல் அல்லது கிருமி நாசினி பாவித்து கையைத் துடைத்துக் கொள்ளுதல்.

2.முடிந்தவரை இன்னொரு நபரிடம் இருந்து அதிலும் அவர் அறிமுகமற்ற நபர் எனில் பேசும் போது, 1 மீட்டர் இடைவெளி பேணுவதும், கைகுலுக்குதல், கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்ற செய்கைகளையும் தவிர்த்தல்.

3.முகம், கண், மூக்கு போன்ற பாகங்களை கைவிரல்களால் தொடுவதைத் தவிர்த்தல்

4.இருமும் போதோ தும்மலின் போதோ டிஷ்யூ பாவித்தல். பாவித்த டிஷ்யூவினை முடிந்தால் டாய்லெட்டில் ஃபிளஷ் செய்தல், டிஷ்யூ இல்லாவிட்டால் சட்டை ஸ்லீவ் இனைப் பாவித்தல். தடிமன்,இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் தனிமையில் வீடுகளில் இருத்தல். தவிர்க்க முடியாத பிரயாணமாக இருந்தால் கட்டாயம் முகக் கவசம் அணிதல், நோய் அறிகுறிகள் தீவிரமடைந்தால் உங்கள் நாட்டின் கோவிட்-19 தொற்றுக்கான மருத்துவ அவசரச் சேவையை அல்லது, குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்ளுதல்

5.கொரோனா அறிகுறிகள் ஒரு நபருக்கு மிகத் திருத்தமாகத் தென்பட முன்பே இன்னொரு நபருக்குப் பரவக் கூடியது என்பதால் இந்தத் தொற்றில் இருந்து உங்களையும், பிறரையும் தற்காத்துக் கொள்ள மேலே உள்ள நடவடிக்கைகள் மிக அவசியமாகும்.

கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2% வீதத்துக்கும் குறைவு என்பதுடன், ஏற்கனவே ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்குமே இது அதிகம் பாதிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :