உலகம்

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இன்று மாலை வரையிலான 24 மணிநேரத்தில் 188 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இதுவரை மொத்தம் 1,016 உயிரிழப்புக்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மொத்தம் 15,113 நோய்த்தொற்றுகள் உறுதிபடுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேவேளை 1,258 பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தாலியின் வெளியுறவு மந்திரி லூய்கி டி மாயோ ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது, "ஐரோப்பாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடு இத்தாலி. ஆனால் அவசரநிலையை விட்டு வெளியேறிய முதல் நாடாகவும் இத்தாலி இருக்குமென நான் நம்புகிறேன்." என்றார்.

அவர் மேலும் பேசுகையில், " இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலி இப்போது அதன் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது.எங்கள் தாத்தாக்கள் போருக்குச் செல்லுமாறு கேட்கப்பட்டனர். அனால் பேரர்கள் நாங்கள் வீட்டில் தங்கும்படி கேட்கப்படுகிறோம். பெரும்பான்மையான குடிமக்கள் விதிகளை மதிக்கிறார்கள். இல்லாதவர்கள் பொருளாதாரத் தடைகளை, அபராதம் அல்லது குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதிர் கொள்வார்கள்." 

"நெருக்கடியைச் சமாளிக்க 25 பில்லியன் டாலர் (b 28 பில்லியன்; b 22 பில்லியன்) செலவிடுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு தேவைப்படும் என்று மதிப்பிட்டதை விட மூன்று மடங்கு அதிகம். பொருளாதாரம் இப்போது ஆழ்ந்த மந்தநிலைக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதிலிருந்து இத்தாலி மீண்டு வரும். அவ்வாறான ஒரு நிலையை ஐரோப்பா உருவாக்கும் என உறுதியாக நம்புகின்றேன் " எனத் தெரிவித்தார்.

இத்தாலியின் சுகாதார அமைப்பில் வைரஸை சமாளிக்க, டொமினிகோ ஆர்குரி என்பவரை புதிய கமிஷனராக அரசாங்கம் நியமித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு அவசரமாகத் தேவையான உபகரணங்களை மீண்டும் வழங்குவதற்கான திட்டத்தை அவர் ஒருங்கிணைப்பார். தற்போது சீனாவில் வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், சீ அரசாங்கம், இத்தாலிக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு, மற்றும் மருத்துவப் பொருட்களை அனுப்புகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :