உலகம்

சுவிற்சர்லாந்தின் இத்தாலிய எல்லைகள் அனைத்தையும் மூடுவது குறித்த ஒரு தீவிர ஆலோசனை இடம்பெறுவதாக பெடரல் கவுன்சிலர் கரின் கெல்லர்-சுட்டர் அறிவித்துள்ளார்.

மத்திய நீதித்துறை மற்றும் காவல் துறையினால் ஏற்கனவே இது ஆலோசிக்கப்பட்டுள்ள போதும், பிற அரசாங்க சகாக்களின் இறுதி ஒப்புதலுடன் கூடிய கையொப்பங்கள் பெறுவதற்கான நிலுவையில் உள்ளது. நாளை இது அரசாங்கத்தால் அங்கீகரிகப்படும். எனவே இத்தாலியுடனான எல்லையை முழுவதுமாக மூடுவது அதிக தூரத்தில் இல்லை.

இதேவேளை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் நிலைமை மோசமடைந்துவிட்டால், இத்தாலியுடன் மட்டுமல்ல சுவிட்சர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான அனைத்து எல்லைகளுக்கும் இந்த கட்டளை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம், சுவிஸ் - இத்தாலி எல்லையிலுள்ள சிறு கடவைகள் ஒன்பது பூட்டப்பட்டு, பிரதான சாலைகளிலுள்ள எல்லைக் கடவைகளால் பயணிகள் அனுமதிக்கபட்டனர். இதனால் அந்தப் பாதைகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் உள்ளூர்வாசிகள் கடும் சிரமத்துக்குளானார்கள். இத்தாலியில் வைரஸ் தொற்று அதிகமாகியுள்ள நிலையில், இத்தாலிய எல்லையூடான பயணிகள் மற்றும் பணியாளர்கள் வருகை பெரும் அச்சத்தையும், அதிருப்தியையும், மக்கள் மத்தியில் ஏற்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :