உலகம்
Typography

அதிபர் ஒபாமா பதவி வகித்த காலத்தில் கடந்த 8 வருடங்களில் அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு 115 பில்லியன் டாலர் ஆயுத உதவியை அளித்ததாகவும் இது இதற்கு முன்னைய அதிபர்கள் பதவி வகித்த போது இல்லாத அளவு பாரிய அளவு என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.  முக்கியமாக யேமெனில் உள்நாட்டுப் போர் தொடங்கிய போது இந்த ஆயுத உதவி அதிகரித்துள்ளது. 

கடந்த வருடம் டெஹ்ரானுடன் அணு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த அமெரிக்கா இந்நடவடிக்கை வளைகுடாவில் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற போதும் டெஹ்ரானுடனுடான வெளியுறவு கொள்கைகளை இன்னமும் நெருக்கமாக்கி வருவதாக தி கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சவுதிக்கு  மிக அண்மைய அமெரிக்காவின் போர் ஆயுத உதவியாக 150 M1A2 ஆப்ராம்ஸ் பேட்டில் டேங்கிகள் வழங்கப் பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 1.15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். யேமெனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபியாவின் யுத்த விமானங்கள் குண்டு மழை பொழிவதால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்