உலகம்

இன்மையில் பிரத்தானியாவிற்குப பயணம் செய்திருந்த கனேடியப் பிரமதரின் மனைவி சோபி கிகோரி வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாகத் தெரிய வருகிறது. கோரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்ட இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் தனிமையில் வைத்துக் கண்காணிப்படுவதாகவும், அவருக்கு பெரிய அளவில் தொற்றுப் பாதிப்பும் இல்லை நல்ல உடலாரோக்கியத்துடன் காணப்படுவதாகவும், வைரஸ் எதிர்ப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பிரதமர் ட்ரூடோவுக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லையெனவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் அவருக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தனித்திருப்பதனால் அவரது செயற்பாடுகளுக்கு எந்த இடையூறும் ஏற்பாடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.