உலகம்

சுவிற்சர்லாந்தில் இன்று நன்பகல் வெளியான புள்ளி விபரங்களின் படி கொரோனா வைரஸ் தொற்று 1000க்கும் அதிகமாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

சுவிஸிற்கு அன்மையிலுள்ள மன்னராட்சிப்பகுதியான லிங்சென்ஸ்டைனில் உறுதி சய்யப்பட்ட 4 தொற்றாளார்கள் உட்பட 1125 நேர்மறையான சோதனையாளர்கள் உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இவற்றில் 1009 பேர் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் எனவும், மிகுதியான 116 பேர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் (FOPH) தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலிருந்து 194 அலகுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வைரஸ் தொற்று காணப்படும் மாநிலங்களில், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாக டிசினோ, வாட் , சூரிச், பாஸல்-நகரப்பகுதி, மற்றும் ஜெனீவா ஆகியன காணப்படுகின்றன.

இத்தாலியில் இருந்து சுவிற்சர்லாந்துக்கு எல்லை தாண்டிய பணியாளர்கள், சுவிஸ் குடியிருப்பாளர்கள் மற்றும் சுவிஸ் குடிமக்கள் மட்டுமே பயணிக்க முடியும். இதுவே ஜேர்மன், பிரான்ஸ், ஆஸ்திரியா நாடுகளின் எல்லைகளுக்கும் பொருந்தும். பள்ளிகள் ஏப்ரல் 5 வரை மூடப்பட்டன. பொது இடங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 50 பேர் வரையிலே கூட முடியும். பிள்ளைகளை பேரன், பேத்தியிடமோ வயதானவர்களிடமோ பராமரிக்க விட்டுச் செல்வதை தவிர்க்கவும். என்பன இன்று தலைநகர் பேர்ணில் கூடிய கூட்டாட்சி அரச தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கபட்ட புதிய முடிவுகளாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :