உலகம்

" இத்தாலி தனியாக இல்லை. சீனா அதன் கால்களைத் திரும்பப் பெறுவதுபோல் நாமும் விரைவில் எமது கால்களில் நிற்போம்." என்று இத்தாலிய வெளியுறவு மந்திரி லூய்கி டி மாயோ தெரிவித்தார்.

இத்தாலி வந்து சேர்ந்த சீன மருத்துவ நிபுணர் குழுவினரை வரவேற்கவும், 31 டன் மருத்தவ உபகரணங்களை உடனடியாக இத்தாலிக்கு அனுப்பிய சீன அரசுக்கு நன்றி தெரிவிக்கவும் நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை ரோமில் நடைபெற்ற அந் நிகழ்வில் அவர் மேலும் பேசும் போது; " இன்று எங்களுக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று நோயுற்றவர்களை கவனித்துக்கொள்வது மற்றும் தொற்றுநோய்களைத் தடுப்பது, இரண்டாவது நமது பொருளாதாரத்தை கவனித்துக்கொள்வது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் அவ்வாறு சொன்ன வெள்ளிக்கிழமை மட்டும் கோரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் தொகை 250 ஆக அதிகரித்திருந்தது. ஒரே நாளில் 25 வீதம் வரை உயர்ந்த இந்த இழப்புக்களினால் இத்தாலியில் இதுவரையிலான இறப்புக்களின் எண்ணிக்கை 1266 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றாளர்களின் தொகையும், 15113 எனும் முந்தையநாள் பதிவிலிருந்து சடுதியாக 17660 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றின் இந்த உயர்வு வேகம் சீனா, மற்றும் உலக நாடுகளை விட மிக வேகமாகவும், 7 வீதம் வரை உயர்வாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதற்கான காரணமாக இத்தாலிய மருத்துவ அதிகாரிகள் ஆரம்பம் முதலே சொல்வது, அதிகளவிலான முதியவர்களும், அவர்களது ஆரோக்கியக் குறைவான உடல்நிலையும் என்பதேயாகும்.

 

இது இவ்வாறிருக்க உலக சுகாதார அமைப்பு , மற்றும் இத்தாலி - சீன செஞ்சிலுவைச் சங்கம், என்பவற்றின் அனுசரணையுடன் இத்தாலி வந்துள்ள மருத்துவ நிபுணர்குழாம், இத்தாலியில் உள்ள நெருக்கடி நிலையை முறியடிப்பதற்கு சகல உதவிகளையும், ஆலோசனைகளையும், இத்தாலிய மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்குவோம் எனக் கூறியுள்ளனர்.

 

அவர்கள் வந்திறங்கியதும் சில மணிநேர ஓய்வு எடுத்துவிட்டு, உடனடியாகவே சேவையில் இறங்கியுள்ளளர். முதற்கட்டமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இத்தாலியின் தற்போதைய நிலை மற்றும் வைத்திய உதவிச் சாத்தியங்கள் போன்ற விபரங்களை அறிந்து கொண்டு அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகினர்.

2020ல் இத்தாலியின் நெருக்கடி நிலைக்கு உதவ வந்த இந்த மருத்துவகுழு, ஒரு நினைவு மீட்டலை செய்தார்கள்.

சரியாக 12 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் சிச்சுவான் நகர் கடுமையான பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட வேளையில், இத்தாலியிலிருந்து பல மருத்துவர்கள் சீனாவிற்கு வந்து உதவினார்கள். இன்று சீன மருத்துவர்கள் COVID-19 க்கு இத்தாலிக்கு உதவ வந்துள்ளார்கள். உதவி வேண்டும் நேரங்களில் உண்மையான நண்பர்கள் சந்திக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

சீனாவிலிருந்து முதற்கட்டமாக இத்தாலிக்கு வந்து சேர்ந்த 31 டன் பொதிகளில்,
1000 நுரையீரல் வென்டிலேட்டர்கள்
100,000 முகமூடிகள்
20,000 பாதுகாப்புமானிகள்
50,000 பரிசோதனை மானிகள் என்பவையாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :