உலகம்

ஐரோப்பிய யூனியனின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் அண்மைய தகவலின் படி உலகம் முழுதும் கோவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு 305 275 பேர் உள்ளாகியும், 12 942 பேர் பலியாகியும், உலகம் முழுதும் சுமார் 96 006 பேர் குணமாகியும் உள்ளனர். கிட்டத்தட்ட 189 நாடுகள் அல்லது பிராந்தியங்களில் இது பரவியும் உள்ளது.

அதிகபட்சமாக சீனாவில் 81 054 பேருக்கும், இத்தாலியில் 53 578 பேருக்கும், அமெரிக்காவில் 30 291 பேருக்கும், ஸ்பெயினில் 28 603 பேருக்கும், ஜேர்மனியில் 24 714 பேருக்கும் ஈரானில் 21 638 பேருக்கும், பிரான்ஸில் 14 459 பேருக்கும், தென்கொரியாவில் 8897 பேருக்கும், சுவிட்சர்லாந்தில் 7230 பேருக்கும், இந்தியாவில் 391 பேருக்கும், ரஷ்யாவில் 367 பேருக்கும், இலங்கையில் 82 பேருக்கும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் இத்தாலியில் 4825 பேரும், சீனாவில் 3261 பேரும், ஸ்பெயினில் 1756 பேரும், அமெரிக்காவில் 388 பேரும், ஜேர்மனியில் 92 பேரும், ஈரானில் 1685 பேரும்,
பிரான்ஸில் 562 பேரும், தென்கொரியாவில் 104 பேரும், சுவிட்சர்லாந்தில் 85 பேரும், பிரிட்டனில் 244 பேரும், நெதர்லாந்தில் 179 பேரும், இந்தியாவில் 7 பேரும் பலியாகி உள்ளனர்.

உலக சுகாதாரத் தாபனமான WHO இன் இயக்குனர் டெட்ரோஸ் சமீபத்தில் அளித்த செவ்வியில் கொரொனா வைரஸுக்கு இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கல்ல என்றும் அண்மைக் காலமாக கணிசமான அளவு இளைஞர்களும் தீவிர நோய் வாய்ப்படும் நிலைக்கும் இதில் வெகு சிலர் மரணிக்கும் நிலையும் ஐரோப்பாவில் ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இது தவிர, 'சமூகத்தில் இளைஞர்கள் நோய் வாய்ப் படா விட்டாலும்,வயதானவர்களுக்கும், ஏனையவர்களுக்கும் இந்தத் தொற்று நோயைப் பரப்புவதில் முக்கிய ஊடகமாகத் தொழிற்படுவதால், இவர்கல் அனைத்து விடய த்திலும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள். வயதானவர்களிடம் இருந்தும், உடல்நிலை சரியில்லாதவர்களிடமிருந்தும் விலகி இருங்கள்.' என டெட்ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக அளவில் கோவிட்-19 பரவி வரும் 4 கட்டங்கள் அல்லது படிகள் குறித்து இன்றைய செய்தியில் பார்ப்போம் :

கோவிட்-19 தொற்று நோய் என்ற உலகளாவிய சுகாதார நெருக்கடி இன்று உலகின் ஒவ்வொரு நாட்டையும் பிரதேசத்தையும் பாதித்துள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவுகையில், வெவ்வேறு நாடுகள் கோவிட்-19 நோயத் தொற்றின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. இது குறித்த பார்வை வருமாறு :

முதலாவது கட்டம் :

இந்தக் கட்டத்தில் கோவிட்-19 ஆல் பாதிக்கப் பட்ட ஒரு நாட்டில் இருந்து பரவாத இன்னொரு நாட்டுக்கு நோய்த் தொற்றுள்ளவர்கள் பயணம் செய்து அவர்களுக்கு வைரஸ் இருப்பது உறுதியானால் அது முதலாவது கட்டமாகும். இதன்போது இந்த வைரஸ் உள்நாட்டில் பரவியிருக்காது. உலகின் பல நாடுகள் இந்த முதற் கட்டத்தைக் கடந்தே வந்துள்ளன.

2 ஆவது கட்டம் :

முதலாவது கட்டத்தில் தொற்று உடையவர்களால் உள்ளூரில் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தொற்றுதல். இது பெரும்பாலும் அவரின் உறவினர் அல்லது நண்பர்கள் அல்லது அவர் பயணம் செய்த பகுதிகளில் அவருடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தவர்கள் அல்லது அவர் தும்மும் போதோ, இருமும் போதோ வெளிப்படும் திரவம் மூலம் தொற்றினை உள்வாங்கியவர்கள், போன்றோருக்கும் தொற்ற இந்த 2 ஆவது கட்டத்தில் அதிக வாய்ப்பு உள்ளது.

இக்கட்டத்தின் போது ஓரளவு சிறியளவு மக்கள் தான் பாதிக்கப் படுகின்றனர். இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது மற்றும் யார் யார் குறித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் போன்ற விபரங்களைத் துப்பறிந்து அவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதும், தனிமைப் படுத்துதலும் எளிது ஆகும். இந்தியா போன்ற நாடுகள் தற்போது இந்தக் கட்டத்தில் உள்ளன.

3 ஆவது கட்டம் :

இந்தக் கட்டத்தின் போது நிலமை சற்று எல்லை மீறிச் சென்று சமூக அளவில் நிறையப் பேருக்குத் தொற்று ஏற்பட்டும் அவர்கள் அனைவருக்கும் வைரஸ் எங்கிருந்து வந்தது, யார் யாருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம்? யார் யாரைக் கட்டாயம் தனிமை படுத்துவது? மற்றும் தொற்று ஏற்பட்ட அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப் பட்டார்களா என்று உறுதிப் படுத்தப் பட முடியாமை போன்ற சிரமமான சூழல்கள் ஏற்பட்டு விடும். இது தவிர வைரஸ் தொற்று உடைய எந்தவொரு நபருடனும் தொடர்பு இல்லாத அதே நேரம் மருத்துவ பரிசோதனையில் புதிதாகத் தொற்று இனம் காணப் படுபவர்களும் அடங்குவர். இதனால் குறித்த கோவிட்-19 வைரஸ் நீர், காற்று மற்றும் தொடுகை மூலம் பரவக் கூடிய கால அளவு குறித்து தீவிரமான மருத்துவ ஆராய்ச்சி உலக அளவில் நடைபெற்று வருகின்றது.

இந்த 3 ஆவது கட்டத்தில் சிங்கப்பூர்,ஸ்பெயின் இத்தாலி ஆகியவை இருந்த போதும் தற்போது இத்தாலி 4 ஆவதும் இறுதியுமான கட்டத்தை அடைந்து விட்டது எனலாம். இந்த 3 ஆவது கட்டத்தில் இருந்து மீள சிறந்த வழி குறித்த நாடுகள் வைரஸால் பாதிக்கப் பட்ட அனைத்து நகரங்களியும் முடக்குதல் அல்லது முடிந்தால் ஊரடங்கினை அமுல் படுத்துதல் ஆகும்.

4 ஆவது கட்டம் :

மிகப்பெரும் கொள்ளை நோயாக (Epidemic) கோவிட்-19 உருவாகும் கையாள மிகக் கடினமான இறுதிக் கட்டமே இதுவாகும். இதன்போது மிக அதிகளவு மக்கள் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மருத்துவ மனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் என அனைத்தும் பற்றாக்குறை ஏற்படும். இக்கட்டத்தில் இருந்து மீள குறித்த நகரை அல்லது பிராந்தியத்தை முற்றிலும் முடக்கி போர்க்கால அடிப்படையில் கையாளப் பட வேண்டும். இத்தாலி நாடு தற்போது இக்கட்டத்தில் உள்ளது. இக்கட்டத்தில் இருந்து தமது ஹுபெய் மாகாணம் மீண்டு வந்து விட்டதாக அறிவித்துள்ள சீனா ஆரம்பத்தில் இந்த கோவிட்-19 இனைக் கையாள ஆறே நாட்களில் 5000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவ மனையை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


கோவிட்-19 பெரும் கொள்ளை நோய் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் மற்றும் அதற்கான விளக்கங்களையும், உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள இந்த இணைப்பை அழுத்துங்கள் :

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 3)

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :