உலகம்
Typography

வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தேசிய கவிதைப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

இவர் வாசித்த கவிதையில் ஆங்கிலத்தைப் பிரதான மொழியாக ஏற்றதால் தாய் மொழியான தமிழை மறக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டது வேதனை அளிக்கின்றது என்ற தொனிப் பொருள் அனைவராலும் பாராட்டப் பட்டது. 4 பேர் பங்குபற்றிய இந்த கவிதைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கலந்து கொண்டனர். இதில் மாயா ஈஸ்வரன் வாசித்த தலைமுடியைப் போல் எனது பூர்வீகமும் உதிரத் தொடங்கி விட்டது. அம்மா எங்கே எனக்கு வழுக்கை விழுந்து விடப் போகின்றதோ என அஞ்சுகின்றேன் என்ற கவிதை மிகவும் பாராட்டப் பட்டது.

 அதிபர் ஒபாமாவின் துணைவியார் மிசேல் ஒபாமா கவிதைகளை வாசித்துக் காட்டிய அனைவரையும் பாராட்டி கௌரவித்தார். தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த மாயா ஈஸ்வரன் பிறந்தது அமெரிக்காவில் ஆகும். ஏற்கனவே பல கவிதைகளை எழுதிய இவர் ஆங்கில மொழிக் கல்வித் தாக்கத்தால் தமிழ் மொழியைப் போல் தமது தாய் மொழிகளைத் தான் மட்டுமன்றி தன்னைப் போல் பல மாணவர்கள் இழந்து வருகின்றனர் என்பதைத் தன் கவிதை மூலம் துல்லியமாக வெளிப்படுத்தியமை அதுவும் வெள்ளை மாளிகையில் எனும் போது அது நிச்சயம் பாராட்டப் படக்கூடியது என்பதில் ஐயமில்லை எனலாம்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS