உலகம்

இத்தாலியில் சென்ற வியாழக்கிழமை முதல் அதிகரித்த கொரோனா வைரஸ் தாக்க இறப்பு விகிதம் சனிக்கிழைமை அதி கூடிய எண்ணிக்கையாக 793 பதிவாகியது. இன்னிலையில் அது நேற்றைய தினம் 651 ஆகக் குறைந்திருந்த இறப்பு விகிதம் இன்று இரண்டாவது நாளாக மேலும் குறைந்து 601 ஆகக் குறைந்துள்ளது.

மேலும் மக்கள் வீடுகளில் இருப்பது இறுக்கமாக்கப்பட்டதன் பின்னதாக வைரஸ் தொற்றின் வேகமும் குறையத் தொடங்கியிருப்பதாக இத்தாலியின் சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை 3957 ஆக இருந்து புதிய தொற்றுக்கள், திங்கட் கிழமை மாலை வரையில் 3780 ஆகக் குறைந்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 480 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்திருப்பதாகவும், இதன்படி மொத்தம் 7432 பேர் சிகிச்சையில் தேறியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க சென்ற வார இறுதியில் இத்தாலிய அரசு விதித்த ஊரடங்கு உத்தரவுகளுக்கும் மேலாக சில மாநில ஆளுநர்கள் மேலும் இறுக்கமான நெறிமுறைகளை அமுல்படுத்தியுள்ளார்கள். இது தொடர்பில் அவர்களில் பலரும், மக்களின் பொறுப்பற்ற தன்மையை வெகுவாக விமர்சித்திருப்பதாகவும் அறிய முடிகிறது. வீட்டை விட்டு வெளியே செல்வதற்காக, உடற்பயிற்சியையும், நாய்களையும் காரணமாகக் காட்டி, தங்களது பொறுப்புணர்வைத் தட்டிக்கழிக்கிறார்கள் எனக் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க; நேற்றிரவு , இத்தாலிக்கான உதவிகளுடன் வந்த இரஷ்ய இராணுவத்தினரின் மருத்துவ உதவிக்குழுவை வரவேற்கச் சமுகமளித்த இத்தாலிய வெளிவிகார அமைச்சர் நேரலையில் பேசும்போது, இத்தாலிக்குப் பல்வேறு நாடுகளிலிருந்தும் மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதற்கான விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். அவ்வேளையில் அவர் நாட்டுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் மீண்டும் சொன்னார் " இப்போது பலரும் நமக்குச் சொல்கிறார்கள். நாங்கள் உங்ககோடிருக்கிறோம் பயப்படாதீர்கள் என்று.  நம்பிக்கையோடிருங்கள் நாங்கள் தனியாக இல்லை. " என்றார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :