உலகம்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் தொகை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளதெனவும், கடந்த 24 மணிநேரத்தில் 368 புதிய தொற்றாளர்கள் பதிவாகயியுள்ளதாகவும், மொத்த உயிரிழப்புக்கள் 123 எனவும் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பிரத்தியேகமான இந்தத் தகவல்களுடன் மத்திய கூட்டாட்சி அலுவலகம் தரும் புள்ளி விபரங்கள் மாறுபடுகின்றன. இன்று (24.03.2020) மதியம் வரையிலான அரச சுகாதாரத்துறையின் புள்ளி விபரங்கள் 8836 தொற்றாளர்களும், 86 உயிரிழப்புக்களும் எனத் தெரிவிக்கின்றன. இது தொடர்பில்  விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் வரையிலான புள்ளி விபரங்களின்படி வோ மாநிலம் (2162), ஜெனிவா மாநிலம் (1231), சூரிச் (1211), திச்சினோ (1211) பேர்ன்(532),தொற்றாளர்களைக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

இது இவ்வாறிருக்க சுவிஸில் வைரஸ் தாக்கத்தின் உச்சம் வரும் வாரங்களில் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆதலால் ஊரடங்குச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் யோசனைகளும், தயாரிப்புக்களும் நடைபெறுவதாகவும் அறிய வருகிறது. அதற்கான முன் தயாரிப்புக்களை சுவிஸ் நடுவன் அரசும், மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. இதற்கான பணிகளில் சுவிஸ் தேசிய இராணுவத்தின் படையணிகள் இணைத்துக் கொள்ளப்படுவதற்குரிய தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் புதிய தற்காலிக வைத்திய கூடங்களை அமைப்பது, மருத்துவர்களின் முன்னகப் பகுதிகளில் செயற்படுவது குறித்த பயிற்சிகள் என்பவற்றில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பணியிலிருக்கும் மருத்துவப்பிரிவு, மற்றும் இடர்கால மீட்புப் பிரிவு இராணுவத்தினருடனும், மருத்துவத்துறையினருடனும், இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை உலகின் பிற பகுதிகளில் - உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கள் குறித்து, பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி தற்போது 380,000 அலகுகளைத் தாண்டிவிட்டன. மேலும் இறப்புகள் 16,500 க்கும் அதிகமானவை. புதிய கொரோனா வைரஸ் தொடர்பான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 6,000 க்கும் அதிகமானவை சுவிற்சர்லாந்துக்கு அருகிலுள்ள இத்தாலியில் பதிவாகியுள்ளது, அங்கு நோய்த்தொற்றுகள் 63,000 அலகுகளைத் தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீழே இத்தாலிய மொழியில் தரப்பட்டுள்ள இரு வீடியோக்களிலும் மருத்துவப் பணயாளர்கள் தங்கள் சிரமங்களைக் கூறுகின்றார்கள், மக்கள் வீடுகளில் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றார்கள்.

வீடியோ 1 ( சுவிஸ் திச்சினோ மாநிலம்)

வீடியோ 2 ( இத்தாலி பேர்கமோ பிராந்தியம் )

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :