உலகம்
Typography

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து இன்னும் 21 நாட்களுக்கு இந்தியா முழுதும் நாடளாவிய ரீதியில் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்த உத்தரவை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய் இரவு தொலைக் காட்சி உரையில் பேசும் போது பிறப்பித்துள்ளார். மிக மிக அவசியம் என்றால் தவிர அடுத்த 21 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டுச் செல்ல வேண்டாம் எனவும், விருந்தினர்களை வீட்டுக்கு அனுமதிக்காதீர்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவிட்-19 குறித்து தேவையற்ற விதத்தில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்த மோடி, அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே கோவிட்-19 பாதிப்பை 100% வீதம் கட்டுப்படுத்துவது சாத்தியம் என்றும் கூறினார். இந்த சுய கட்டுப்பாட்டை மக்கள் கடைப்பிடித்து வீடுகளில் இருக்கத் தவறினால் இந்தியா இன்னும் 21 வருடங்கள் பின்னோக்கிச் சென்று விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஏனைய மருத்துவ ஊழியர்களின் சிரமங்களைப் பொது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும்
இந்த லாக்டவுனால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப் பட்டாலும் பரவாயில்லை. எனக்கு மக்களின் உயிர்ப் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா பாதிப்பால் ஜூலையில் டோக்கியோவில் நடக்கவிருந்த சர்வதேச ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2021 ஆமாண்டு கோடை காலத்துக்குத் தள்ளிப் போவதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேக்கும், சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் அதிபர் தோமஸ் பா இடையே இணக்கம் எட்டப் பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் ஜப்பான் பிரதமர் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் திட்டமிட்டபடி ஜுலையில் நடைபெறும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அபே கருத்துத் தெரிவிக்கும் போது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தள்ளிப் போடப் படுகின்றனவே தவிர அவை ரத்து செய்யப் படுமா என்ற கேள்விக்கு ஒருபோதும் இடமில்லை என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்