உலகம்
Typography

வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் மற்றும் கொரோனா வைரஸை அந்நாடு எதிர்கொள்ளும் விதத்தில் உதவுதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டு அதிபர் கிம்முக்கு கடிதம் வரைந்துள்ளார்.

இத்தகவலை வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் உறுதிப் படுத்தியுள்ளார்.

அதிபர் டிரம்பின் கடிதத்தில் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்கான விருப்பமும், அதற்கான திட்டமும் விவரிக்கப் பட்டுள்ளதுடன் அங்கு கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை நல்கவும் தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இரு நாட்டுக்கும் இடையேயான முரண்பாடுகள் பாரியளவில் இருக்கையில் நல்லெண்ண அடிப்படையில் டிரம்ப் கடிதம் வரைந்தது பாராட்டத் தக்கது என கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ உறுதிப் படுத்தியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்