உலகம்
Typography

இத்தாலியில் கடந்த இரு தினங்களாகக் குறைந்திருந்த கொரோனா வைரஸ் தாக்க இறப்பு வீதம், இன்று மீண்டும் உயரந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தோர் எண்ணிக்கை 743 ஆகப் பதிவாகியுள்ளது. இது இத்தாலியில் கொரோனா நெருக்கடி தொடங்கிய பின்னர் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

சிவில் பாதுகாப்பு பாதுகாப்பு மையத்தின் அதிகாரிகள் புள்ளி விபரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இறப்பு வீதம் இன்று அதிகமாக இருந்தாலும் நோய் தொற்று வீதம் நேற்றைய எண்ணிக்கையை விடக் குறைவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். நேற்று 3,780 ஆக இருந்த நோய் தொற்று எண்ணிக்கை, இன்று 3,612 ஆகக் குறைந்துள்ளமை நம்பிக்கையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

கடந்தமாதம் 21ந்திகதி முதலாவது வைரஸ் தொற்று தொடங்கியதில் இருந்து இப்போது வரை நாட்டில் 69,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் 6,820 பேர் இறந்துள்ளார்கள். அதேவேளை 8,326 பேர் நோய் தொற்றிலிருந்து மீட்கப்பட்டு உள்ளனர். தற்போது 54,030 பேர் வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏறக்குறைய 900 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இறப்புகள் அதிகரித்த போதிலும், தேசிய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதற்கான தரவுகளாக இவற்றைக் கொள்ளலாம்.

"இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் ஒரு விளைவை ஏற்படுத்தத் தொடங்குகின்றன. எதிர்வரும் புதன்கிழமை மாலை, அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் காலாவதியாகின்றன. ஆயினும் நெருக்கடி நிலை தொடர்வதால், அரசாங்கம் அவற்றை ஏதேனும் ஒரு வடிவத்தில் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு நீடிக்க வேண்டியிருக்கும் என சிவில் பாதுகாப்பு சேவைத் தலைவர் ஏஞ்சலோ பொரெல்லி இன்று தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்