உலகம்
Typography

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பேக்கஜிங் தொழிற்சாலை ஒன்றில் இன்று சனிக்கிழமை திடீரென பொயிலர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பலியாகியும் 50 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் உள்ளனர். 

காலை 6:15 இற்கு டொங்கியிலுள்ள பிசிக் தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதை வங்கதேசத்தின் காசிப்பூர் தீயணைப்புப் படையினரும் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவும் உறுதிப் படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்த போதும் பலி எண்ணிக்கையைத் தடுக்க முடியவில்லை.

கொல்லப் பட்ட 21 பேரிலும் 13 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காலை 6:15 இற்கு ஏற்பட்ட தீயை அணைக்க கடுமையாப் போராடியும் நண்பகல் வரை அணைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்