உலகம்
Typography

worldometer என்ற இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ அண்மைய தரவுப்படி உலகின் 196 நாடுகளில் பரவியுள்ள கோவிட்-19 தொற்று பற்றிய முக்கியமான புள்ளிவிபரங்களைப் பார்ப்போம்.

கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் : 440 318
பலியானவர்கள் : 19 752
குணமடைந்து வீடு திரும்பியவர்கள் : 112 015

நாடளாவிய புள்ளி விபரம் கீழே :

சீனா : தொற்றுக்கு உள்ளானவர்கள் : 81 218, பலியானவர்கள் : 3281
இத்தாலி : 69 176 : 6820
அமெரிக்கா : 55 081 : 785
ஸ்பெயின் : 47 610 : 3434
ஜேர்மனி : 35 704 : 181
ஈரான் : 27 017 : 2077
பிரான்ஸ் : 22 304 : 1100
சுவிட்சர்லாந்து : 10 537 : 149
தென்கொரியா : 9137 : 126
பிரிட்டன் : 8227 : 433
நெதர்லாந்து : 6412 : 356
இந்தியா : 606 : 10
இலங்கை : 102 : உயிரிழப்பு இல்லை

இதேவேளை பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானதாக இலண்டன் பக்கிங்ஹாம் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 71 வயதாகும் இளவரசர் சார்லஸ் ஸ்காட்லாந்தில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளார். மேலும் தற்போது இலேசான அறிகுறிகளையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சார்லஸது உடல்நிலை ஆரோக்கியமாகவே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சார்லஸுக்கு சரியாக யாரிடம் இருந்து வைரஸ் பரவியது என்பது தெரியாத நிலையில், அவரின் மனைவி கமீலாவுக்கு நடத்தப் பட்ட சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரும் கூடத் தனிமைப் படுத்தப் பட்டுள்ளார். சார்லஸ் அண்மைக் காலமாக சில விழாக்களில் பங்கு பற்றியிருந்த போதும் கைகுலுக்குவது போன்ற அடிப்படைச் செய்கைகளைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் தான் அவர் இருந்து வந்தார் என்று தெரிய வருகின்றது.

கோவிட் -19 பெரும் கொள்ளை நோய் பற்றிய சில சந்தேகங்களும், விளக்கமும் மற்றும் நாம் அது பரவாது தடுக்கப் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்துக..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்