உலகம்
Typography

ரஷ்யாவின் குரில் தீவுகளில் புதன்கிழமை கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

இதைத் தொடர்ந்து உடனடியாக ரஷ்யாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா, ஹவாய் தீவுகளை மோசமான சுனாமி அலைகள் தாக்கலாம் என உடனடியாக அமெரிக்கப் புவுயியல் ஆய்வு மையமான USGS எச்சரிக்கை விடுத்தது.

மேலும் குரில் தீவுகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் வெளியேற்றப் பட்டனர். ஆனால் பின்னர் மிகச் சிறிய அளவிலான சுனாமி அலைகள் மாத்திரம் குரில் தீவுகளைத் தாக்கியது அறியப் பட்டவுடன் இந்த சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டது. முன்னதாகக் கடந்த காலங்களில் ரிக்டர் அளவுகோலில் இந்தளவு வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து வெகு தொலைவுக்கும் சுனாமி அலைகளை ஏற்படுத்தியமைக்கான பதிவுகள் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்