உலகம்
Typography

ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலத்தில் 738 இறப்புக்கள் பதிவாகியுள்ளதை அடுத்து அங்கு மொத்தப் பலி எண்ணிக்கை 3434 ஆகியுள்ளது.

இது கோவிட்-19 வைரஸ் ஆரம்பமாகிய சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை விட அதிகமாகும். மேலும் இத்தாலி, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து கோவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப் பட்ட 3 ஆவது உலக நாடாக ஸ்பெயின் விளங்குகின்றது.

கடந்த 11 நாட்களாக கால வரையறை அற்ற லாக்டவுனில் ஸ்பெயின் இருந்து வருகின்றது. அங்கு தற்போது 47 610 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ஏப்பிரல் 11 ஆம் திகதி வரை ஸ்பெயினில் நாடளாவிய முடக்கம் நீட்டிக்கப் பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றினால் அதிகம் பீடிக்கப் பட்டுள்ள தலைநகர் மேட்ரிட்டில் வைத்திய சாலைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும், அங்கு போர்க்கால அடிப்படையில் இராணுவத்தினர் தற்காலிக மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் இந்த நகரில் மரணச்சடங்கு செய்வதற்கான சேவைகளில் எண்ணற்ற சடலங்கள் வந்து சேர்ந்திருப்பதால் அவற்றைப் பாதுகாப்பாக முறைப்படி அகற்றுவதிலும் சவால் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் சமீபத்தில் சீனாவிடம் இருந்து 432 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை அண்மையில் ஸ்பெயின் கொள்வனவு செய்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்