உலகம்

நாடு முழுவதும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவாது இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இன்று மார்ச் 25 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து ஏனைய நாடுகளுக்கான தனது அனைத்து எல்லைகளையும் மூடுவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

இந்த எல்லைகள் வழியாக சுவிட்சர்லாந்துக்கு உள்ளே நுழைய சுவிஸ் குடியுரிமை உள்ளவர்கள் (Citizens),ஏனைய குடிமக்கள் (Residents) மற்றும் எல்லை தாண்டி வந்து வேலை செய்யும் வேண்டிய கட்டாயத்தில் உள்ள பணி அனுமதிப் பத்திரம் (Working Permit) உள்ளவர்கள் மாத்திரமே அனுமதிக்கப் படுவர் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கடந்த மாதம் முதல் அமுல் படுத்தப் பட்ட படிப்படியான எல்லை மூடல்களின் போதான கட்டுப்பாடுகள் அண்மைய செங்கன் நாடுகளான இத்தாலி,
ஆஸ்ட்ரியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளையும் அனைத்து செங்கன் அல்லாத நாடுகளையும் சேர்ந்த குடிமக்களுக்குப் பொருந்தக் கூடியதாய் இருந்தது. ஆனால் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய கட்டுப்பாடுகள் லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) தவிர ஏனைய அனைத்து செங்கன் மற்றும் செங்கன் அல்லாத நாடுகளுக்கும் விதிக்கப் படுவதுடன் இந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய அனைத்து விமானங்களுக்கும், எல்லைக் கடவைகளுக்கும் (border crossings) புதிய விதிகள் ஏற்படுத்தப் படுகின்றன.

முக்கியமாக இந்த நாடுகளில் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் அனுமதிப் பத்திரம் இல்லாத பணியாளர்கள் மற்றும் ஏனைய சேவைகளைப் பெறுபவர்கள் அனைவருக்கும் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப் படுகின்றது. இது தவிர ஒரு மருத்துவ தேவைக்கோ அல்லது வேலை தேடுவதற்கோ சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முற்படுபவர்களுக்கும் அனுமதி மறுக்கப் படுகின்றது.

ஆனால் இந்தத் தடைகளுக்கு மட்டுப்படுத்தப் பட்ட சில தளர்வுகள் உள்ளன. உதாரணத்துக்கு மருத்துவ வல்லுனர்கள் அல்லது அரசகரும அல்லது இராஜதந்திர வருகையாளர்கள் (diplomatic visitors) போன்றவை அவற்றில் சில. இது தவிர மிகவும் தவிர்க்க முடியாத தேவைக்காக சுவிட்சர்லாந்துக்கு வருகை அளிப்பவர்களுக்கும் பெடரல் நீதித்துறை மற்றும் போலிஸ் திணைக்கள சட்டத்தின் படி விதிவிலக்கு அளிக்கப் படும்.
அதற்கான வழிகாட்டி இதோ :

https://www.ejpd.admin.ch/ejpd/de/home/aktuell/news/2020/2020-03-25.html

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

கொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.