உலகம்
Typography

தான் பதவியேற்ற சில மாதங்களுக்குள் மியான்மாரில் இராணுவத்தினருக்கும் சிறுபான்மை போராளிக் குழுக்களுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த முனைப்புடன் செயற்பட்டு வருபவர் மியான்மார் அரச தலைவி ஆங் சான் சூ க்யி ஆவார். 

இவரது அடுத்த அதிரடி நடவடிக்கையாக மியான்மார் இராணுவத்தில் இருந்து 55 சிறுவர் துருப்புக்கள் நீக்கப் பட்டுள்ளனர். மிகவும் பலம் பொருந்தியதாக கடந்த 50 வருடங்களாக இராணுவ ஆட்சி நிலவிய மியான்மாரில் மொத்தம் எத்தனை சிறுவர் படையினர் உள்ளனர் என்று தெரியவில்லை என ஐ.நா கவலை தெரிவித்த நிலையில் இந்த 55 சிறுவர்கள் படையில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர்.

மியான்மாரில் இராணுவ ஆட்சி நிலவிய போது படையில் இருந்த பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் துன்புறுத்தப் பட்டார்கள் என்று கூறப்படும் நிலையில் 2012 இல் ஐ.நா உடனான ஓர் ஒப்பந்தத்தின் பின் இராணுவம் இதுவரை 800 சிறுவர்களை விடுவித்துள்ளது.

தற்போது விடுவிக்கப் பட்டு வரும் சிறுவர்கள் யாவரும் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் ஆவர். மியான்மாரின் பலம் பொருந்திய இராணுவத்துடன் எல்லைப் பகுதிகளில் இன்றைய திகதியில் சுமார் 11 பூர்வீக சிறுபான்மை போராளிக் குழுக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்