உலகம்
Typography

Worldometer தளத்தின் அதிகாரப்பூர்வ அண்மைய தகவல் படி உலகம் முழுதும் 198 நாடுகளில் கோவிட்-19 வைரஸ் பரவியுள்ளது. இது தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே:

உலகம் முழுதும்,

கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்னிக்கை : 503 072
பலி எண்ணிக்கை : 22 339
குணமானவர்கள் எண்ணிக்கை : 121 227

நாடளாவிய புள்ளி விபரம் :

சீனா : பாதிக்கப் பட்டவர்கள் : 81 285 : பலியாவர்கள் : 3287
அமெரிக்கா : 75 066 : 1080
இத்தாலி : 74 386 : 7503
ஸ்பெயின் : 56 197 : 4145
ஜேர்மனி : 43 646 : 239
ஈரான் : 29 406 : 2234
பிரான்ஸ் : 25 233 : 1331
சுவிட்சர்லாந்து : 11 712 : 191
பிரிட்டன் : 9849 : 477
தென்கொரியா : 9241 : 131
நெதர்லாந்து : 7431 : 434
இந்தியா : 719 : 16
இலங்கை 104 : உயிரிழப்பு இல்லை

கோவிட்-19 தொற்றுதல் தீவிரமாகப் பரவுவதைத் தடுப்பதற்கும், நிவாரண நடவடிக்கைகளுக்குமாக அமெரிக்க செனட் சபை 2 டிரில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உலக அளவில் கோவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடுகளில் தற்போது அமெரிக்கா 3 ஆவது இடத்திலுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கோவிட்-19 தொற்றுக்கு 75 066 பேர் உள்ளாகியுள்ளனர்.

கோவிட்-19 இனால் சுமார் 1036 பேர் பலியாகி இருக்கும் அமெரிக்காவில் இந்த மாதத் தொடக்கத்தில் வெறும் 80 பேருக்குத் தான் இது இனம் காணப் பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க அரசு ஒதுக்கீடு செய்திருக்கும் நிதி மூலம் வீடுகளில் முடங்கியிருக்கும் அமெரிக்க மக்களில் பலருக்கு நேரடியாக அவர்கள் கணக்கிற்கு தலா 1200 டாலர் அனுப்பப் படவுள்ளது. இது தவிர தொழிற்சாலைகளுக்கு மாத்திரம் 500 பில்லியன் டாலர் நிதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

கோவிட்-19 காரணமாக உலகின் பல நாடுகளைப் போன்றே அமெரிக்கப் பொருளாதாரமும் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்றை எதிர்கொள்ள மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரத் தேவைக்கு 100 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்த உங்களது சந்தேகங்களையும், அதற்கான விளக்கத்தையும் இத்தொற்று உங்களுக்கும், பிறருக்கும் பரவாது தடுக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியவும் கீழே உள்ள இணைப்பை அழுத்துக..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்