உலகம்
Typography

கடந்த வருடங்களில் இடம்பெற்ற பருவநிலை சீர்கேடு தொடர்பான சர்வதேச மாநாடுகளில் சுற்றுச் சூழல் மாசில் உலகின் வளி மண்டலத்துக்கு அதிகளவு கார்பன் டை ஆக்ஸைட் போன்ற தீங்கான வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் எவை எவை என்ற கேள்வி எழுந்திருந்தது.

இதில் பல வல்லரசுகள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கின. அவற்றில் முக்கியமான ஒரு நாடு சீனா.

உண்மையில் சீனாவின் மிகப் பெரும் வர்த்தக நகரங்களான பீஜிங் மற்றும் ஷாங்காய் உட்பட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் பூமியின் வளி மண்டலத்துக்கு கடந்த காலங்களில் பாரியளவில் தீங்கான வாயுக்களை வெளியிட்டு வந்துள்ளன. ஆனால் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய போது இதில் மிகப் பெருமளவிலான தொழிற்சாலைகள் மூடப் பட்டதால் இவற்றில் இருந்து இக்கால கட்டத்தில் வெளியான பச்சை வீட்டு விளைவை ஏற்படுத்தும் வாயுக்களின் சதவீதமும் மிக மிகக் குறைந்து விட்டது. இந்த வேறுபாட்டை நாசாவின் செய்மதிகள் புகைப் படங்கள் எடுத்து நிரூபணம் செய்துள்ளன.

முன்னதாக சில ஆய்வுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைட் வாயுவின் வீதத்தை விட அதிகமாக சீனா வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சீனா இதனை மறுத்து வந்தது. இந்நிலையில் நாசாவின் செய்மதிகள் 2019 டிசம்பர் 20 ஆம் திகதியும், நோய் பாதிப்பு உச்சத்தில் இருந்த 2020 மார்ச் 16 ஆம் திகதியும் எடுத்த இருவேறு புகைப் படங்களை ஒப்பிட்டே சீனா உலகின் சுற்றுச் சூழல் மாசுக்கு இழைத்து வரும் பங்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது அமெரிக்கா.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய ஹுபேய் மாகாணத்தின் வுஹான் நகர் உட்பட சீனாவின் பல பகுதிகள் தற்போது இயல்பு நிலைக்குப் படிப்படியாகத் திரும்பி வருகின்றன. இந்நிலையில் நாசா மற்றும் ஐரோப்பாவின் ஈசா ஆகிய விண்வெளி ஆய்வு மையங்களின் செய்மதிப் படங்கள் மூலம் இத்தாலி, நியூயோர்க், சிக்காக்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களுக்கு மேலே உள்ள வளி மண்டலப் பகுதியிலும் நைட்ரஜன் டை ஆக்ஸைடின் அளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்