உலகம்
Typography

உலகின் 85% வீதப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஜி20 நாடுகள் அமைப்பு வியாழக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலகளாவிய கொரோனா பெரும் கொள்ளை நோய்த் தொற்றைத் தடுக்க 5 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்க முடிவு செய்துள்ளது.

உலகம் முழுதும் 198 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 தொற்று ஜி20 நாடுகளைத் தான் அதிகளவில் பாதித்துள்ளது.

ஜி20 நாடுகளின் பட்டியலில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உள்ளன. ஜி20 நாடுகளின் இன்றைய இந்த ஆலோசனை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப் பட்டது. இந்தியா சார்பாக பிரதமர் மோடி இதில் பங்கேற்றுக் கொண்டார்.

மேலும் இந்த மாநாட்டின் போது கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டங்கள், வழிமுறை, அறிவியல் உதவி, பண உதவி என அனைத்தையும் ஒன்று திரட்ட வேண்டும் என்றும் ஜி20 நாடுகள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கொரோனா தொற்று நோயை எதிர்கொள்வது மருத்துவ ரீதியாக எவ்வளவு பெரிய சவாலோ அதே போன்று இதனால் ஏற்படும் பொருளாதார ரீதியிலான சவால் அதாவது பலரின் அடிப்படை வாழ்வாதார வேலை இழப்பு போன்றவற்றை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.

இந்தியப் பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் பேசும் போது உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து இந்த கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும் என்றும் இனி வரும் காலத்திலும் இது போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் உலக சுகாதார மையம் தயார் நிலையில் இருக்கும் அடிப்படையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்