உலகம்

இத்தாலியை புரட்டிப்போடு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து 101 வயது நபர் ஒருவர் மீண்டு வந்திருக்கின்றார். மார்ச் 27 வெள்ளிக்கிழமை இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்திருக்கின்றார்.

இத்தாலியின் முக்கிய சுற்றுலாத் தளமான ரிமினியின் மருத்துவமனையிலிருந்து நலமாக அவரது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்படும் செய்தியை, வியாழக்கிழமை, உள்ளுர் ஊடகங்களுக்கு ரிமினியின் துணை மேயர் குளோரியா லிசி அறிவித்திருந்தார்.

கடந்த வாரத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் ரிமினியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த நபருக்கு “திரு. பி ”அதிகாரிகள் பெயரிட்டார்கள். 1919 இல் ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய்களின் போது அவர் பிறந்திருக்கிறார்.

ஸ்பானிஷ் காய்ச்சல் என்பது வழக்கத்திற்கு மாறான கொடிய தொற்றுநோயாகும், இது 1918 மற்றும் 1920 க்கு இடையில் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றது. இத்தாலியில் குறைந்தது 600,000 மக்கள் ஸ்பானிஸ் காச்சலால் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டு காலம் வாழ்திருக்கும் அவர் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். போர், பசி, வலி, முன்னேற்றம், நெருக்கடி மற்றும் உயிர்த்தெழுதல் என எல்லாவற்றையும் சந்தித்திருப்பதாக அவர் கூறினார். 100 ஆண்டு கால வாழ்வின் பின்னதாக கொரோனா எனும் இந்த புதிய சவாலை சந்தித்தித்து மீண்டிருக்கின்றார்.

"வயதானவர்களுக்கு ஒரு ஆபத்தான வைரஸ் பற்றி சோகமான செய்தி அறிக்கைகள் தினமும் சொல்லும்போது, ​​இந்த வயதில் அதில் இருந்து மீண்டு வந்த ஒரு நபரின் கதையில் நம் அனைவருக்கும் நம்பிக்கை பிறக்கிறது " என துணை மேயர் குளோரியா லிசி கூறினார்.

இவர் வீடு திரும்பிய அதே வெள்ளிக்கிழமை மட்டும் கொரோனோ வைரஸின் தாக்கத்தினால் இத்தாலியில் உயிரிழந்தவர்கள் தொகை 919. வெள்ளிக்கிழமை வரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் தொகை, 86,498 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 9,134 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆயினும் இந்த வாரத்தில் புதிய தொற்றுக்கள் ஏற்படுவது படிப்படியாகக் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தாலிய சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறை, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் மருத்துவ ஊழியர்களிடையே அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் என்பவற்றுக்கும் மத்தியில், இதுவரை 10 950 பேர்களை தொற்றிலிருந்து காப்பாற்றியுள்ளனர்.

இந்த அரும்பணியை ஆற்றுக்கின்ற மருத்துவப் பணியாளர்கள் கூறுகையில், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்ட நோயாளிகளுக்கு இறப்பு விகிதம் கடுமையாக உயர்ந்தாலும், வயதான இத்தாலியர்கள் வைரஸால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முழுமையாக குணமடைந்த ஏராளமானவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

லோம்பார்டியின் மிக மோசமான பிராந்தியத்தில் உள்ள ப்ரெசியாவில், சமீபத்தில் வைரஸிலிருந்து மீண்ட 83 வயதான ஒரு நபரின் குடும்பம், அவர் “மறுபிறவி” எடுத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கிறது. லோம்பார்டியின் லோர்டி என்ற இடத்தில், 86 வயதான கியானா என்ற பெண்ணும் மருத்துவமனையில் தொற்றுநோயை எதிர்த்து ஏழு வாரங்கள் கழித்து, சென்ற புதன்கிழமைமீண்டு வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எமிலியா-ரோமக்னா மாகாணத்திலுள்ள மொடெனாவில் வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்ட முதல் நோயாளி 95 வயதான ஒரு பெண், என கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளிலெல்லாம் இருந்து மேலும் வித்தியாசமானது ஜியாம்பிரோ கிரோனின் கதை. 

மருத்துவர்கள் பற்றாக்குறை நீக்க இத்தாலி அரசு, மருத்துவத்துறைக்கு 300 மருத்துவர்கள் உடனடியாகத் தேவை, 24 மணிநேரத்துக்குள் விண்ணப்பிக்குமாறு அரசு அறிவிக்க, உடன் விண்ணப்பித்த 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுள், வெனிஸ் நகைச் சேர்ந்த 85 வயதான கிரோனும் ஒருவர்.

ஒரு மயக்க மருந்து நிபுணரான அவர் சொல்கின்றார், " எனது சேவையினை அரசாங்கம் கேட்டது, நான் ஆம் என்று சொன்னேன். வாழ்க்கையில் ஒரு டாக்டராக முடிவு செய்தால், இவ்வாறான தருணத்தில் சேவையாற்ற வேண்டும் எனும் விருப்பம் கண்டிப்பாக வரும். அப்போது உடல்நிலை சரியில்லை. மூப்படைந்து விட்டேன் என்ற பேச்சுக்கு இடமில்லை " என்கிறார் 85 வயதான ஜியாம்பிரோ கிரோன்.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.