உலகம்

இத்தாலிய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இதுவரை இறந்த 11,591 பேருக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், இன்று நாடு முழுவதிலுமுள்ள நகரசபைகளில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. நாடு முழுவதிலுமுள்ள நகரசபைகளின் தலைவர்கள், நன்பகல் ஒரு மணிக்கு, நகர மண்டப்த்தின் முன்னே தனியாக நின்று ஒரு நிமிடம் அமைதி காத்து அஞ்சலி செலுத்தினர்.

இத்தாலியத் தலைநகர் ரோம் நகர மண்டபத்திற்கு வெளியே , ரோம் மேயர் வர்ஜீனியா ராகி இன்று நண்பகலில் ஒரு நிமிடம் அமைதியாக நின்று அஞ்சலி செய்த பின் கூறினார். " இத்தாலிய முழுநாட்மையும் காயப்படுத்திய பெருந்துயரம் நிகழ்ந்த மாதம் இது. இந்தத் துயரிலிருந்து நாங்கள் ஒன்றாக சேர்ந்துமீண்டு வருவோம்" எனக் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், "உயிரை இழந்த அனைவருக்கும் மற்றும் நம் அனைவருக்காகவும், வேலை செய்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்திய மருத்துவர்கள் செவிலியர்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் பணிபுரியும் மக்கள் அனைவருக்கும் நாங்கள் மரியாதை செய்ய வேண்டும். வீட்டிலேயே தங்கும்படி கேட்கும்போது, நாம் சில தியாகங்களை, நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் கருதிச் செய்ய வேண்டும்." எனத் தெரிவித்தார்.

இத்தாலியின் வணிகப் பெருநகரமான மிலாளோவின் மேயர் யூசெப்பே சலா நகர மண்டபத்திற்கு வெளியே ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின் பேசுகையில், " கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகெங்கும் எற்பட்டுள்ள இறப்புக்களில், மூன்றில் ஒரு பங்கு இழப்புக்கள் இத்தாலியில் நிகழ்ந்துள்ளன. இன்றையநாள் துயரம் மிகுந்த ஒரு மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு இத்தாலி ஒரு பேரழிவால் அதிக இறப்புகளை இந்த மாதத்தில் கண்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டார்.

இன்றைய நாளில், வத்திக்கான் நகரமும் அதன் மஞ்சள் மற்றும் வெள்ளை கொடிகளை இத்தாலியின் மற்ற பகுதிகளோடு இணைந்த ஒற்றுமையின் வெளிப்பாடாக அரை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டிருக்கிறது.

இத்தாலியின் பிரதம மந்திரி யூசெப்பே கோன்டே, " நோய்க்கு எதிரான எந்தவொரு முன்னேற்றத்தையும் செயல் தவிர்க்காமல் பார்த்துக் கொள்வதற்காக அனைத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் கவனிக்கப்படும்" என்றார்.

நாட்டில் 100,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவுவதைத் தடுக்க இத்தாலிய அரசாங்கம் மூன்று வாரங்களுக்கு முன்பு தேசிய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை விதித்தது. குறைந்த பட்சம் மே வரை கடைகளும் உணவகங்களும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கில்லை, ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எந்த அதிகாரியும் கணிக்கத் தயாராக இல்லை.

இத்தாலியில் தொற்றுநோய் குறைந்து வருவதற்கான சான்றுகள் இருந்தாலும், அதிகாரிகள் இது நடவடிக்கைகளை நீக்குவார்கள் என்று அர்த்தமல்ல. மக்களை வீட்டிலேயே இருக்குமாறு தொடர்ந்து வலியுறுத்துவார்கள் எனத் தெரியவருகிறது.இத்தாலியின் பொது சுகாதார நிறுவனத்தின் தலைவர் சில்வியோ புருசாஃபெரோ நேற்றைய தினம் கூறுகையில், "இன்னும் வைரஸ் தொற்றின் கீழ்நோக்கு சரிவு நிலைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் செயல்கள் மேம்படுகின்றன. தற்போது ஒரு தட்டையான நிலை தென்படுகிறது."

"இத்தாலியை தனிமைப்படுத்த முடிந்ததனால், தொற்றுநோய் பலவீனமடைகிறது என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது. எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கிள்றோம் " என மிலானோவின் லூயி சாக்கோ மருத்துவமனையின் தொற்று நோய்கள் துறையின் தலைவர் மாக்சிமோ கல்லி இத்தாலிய வானொலிக்குத் தெரிவித்துள்ளார்.

சர்வதேசப் பொருளாதார அமைப்பு ஒன்றின் ஆய்வுத் தரவுகள், இத்தாலியின் வைரஸ் பரவல், மே மாத நடுப்பகுதியில் பூஜ்ஜியம் புள்ளியாகக்கூடும் எனத் தெரிவித்திருக்கிறது.

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.