உலகம்

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்திருப்பதாகவும், அதனால் அவர் தனிமைப் படுத்துதலில் இருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பதாகவும் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப் பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் தன் மனைவி கமீலாவுடன் ஸ்காட்லாந்தில் தனிமையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்ட ஸ்டார் வார்ஸ் திரைப்படப் புகழ் பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜாக் தனது 76 ஆவது வயதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே இன்னுமொரு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு அவர்கள் தனிமையில் இருந்து வருகின்றனர். மேலும் அவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு நலமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலில் முதன்மை ஆய்வாளர் மற்றும் எச் ஐ வி தடுப்புப் பிரிவின் இயக்குனராகக் கடமையாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா ராம்ஜி என்ற வைராலஜி நிபுணர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். 50 வயதாகும் கீதா ராம்ஜி கிட்டத்தட்ட 170 இற்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் மட்டுமன்றி பல உயரிய விருதுகளையும் வென்றவர் ஆவார்.

தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக 21 நாள் ஊரடங்கு அமுலில் உள்ளது. இதனால் டாக்டர் கீதா ராம்ஜியின் இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் இன்னமும் வெளிவரவில்லை.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.