உலகம்

11 ஐரோப்பிய நாடுகளில் பல நகரங்களில் பொது மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப் பட்டு நகரங்களும் முடக்கப் பட்டதால் சுமார் 59 000 மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளன என பிரிட்டனின் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த ஆய்வு முக்கியமாக கொரோனா வைரஸினால் தீவிரமாகத் தாக்கப் பட்டு 4 ஆவது கடைசிக் கட்டத்தில் இருக்கும் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளது அனுபவங்கள் அடிப்படையிலும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

அதாவது திருத்தமான பலி எண்ணிக்கையுடன், பள்ளிகள் மூடப்படாது, நிகழ்வுகள் ரத்து செய்யப் படாது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதுடன் ஒப்பிட்டு இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வெளியான இக்கணிப்பில் உலகம் முழுதும் கொரோனா பெரும் தொற்று நோய் பரவலைத் தடுக்க பில்லியன் கணக்கான மக்கள் வீடுகளில் இருக்க உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நகரங்கள் முடக்கப் படாது இருந்திருந்தால் மார்ச் 28 ஆம் திகதிக்குள் இத்தாலியில் சுமார் 5.9 மில்லியன் பொது மக்கள் அதாவது இத்தாலி சனத் தொகையில் 10% வீதமானவர்களும், ஸ்பெயினில் 7 மில்லியன் பொது மக்கள் அதாவது அந்நாட்டு மொத்த சனத் தொகையில் 15% வீதமானவர்களும் கோவிட்-19 என்ற கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பர் எனவும் இப்போது கூட இந்நாட்டு அரசுகளின் புள்ளி விபரம் திருத்தமானது என்று கூற முடியாது என்றும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மெல்ல மெல்ல இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசு இந்த வைரஸுக்கு எதிரான போரில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள தென்கொரியா, ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து செயற்படவும், அவர்கள் கையாண்ட முறைகளை அறிந்து கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றது.

இதேவேளை உலகில் தற்போது கொரோனா தொற்றுக்களால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடான அமெரிக்கா 1 இல் இருந்து 2 இலட்சம் உயிரிழப்புக்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் உதவி : Economical times

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.